ஒரு மாதத்தில் 5 கிலோ எடையைக் குறைக்க முடியுமா? இதை செய்ங்க போதும்
நாம் சில முக்கியமான விடயங்களை செய்தால் ஒரே மாதத்தில் நம்மால் ஐந்து கிலோ குறைக்க முடியும் எனப்படுகின்றது.

எடை குறைப்பு
இன்றைய முறையற்ற வாழ்க்கை முறையால் மனிதர்கள் பல நோய்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது. இதை தடுப்பதற்கு ஜிம் செல்கின்றனர் யோக செய்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் நேரத்தை ஒதுக்க முடியாதவர்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர்.
அவர்களுக்காக இந்த பதிவில் ஒரு மாதத்தில் ஐந்து கிலோ எப்படி குறைக்கலாம் என்பதை பார்க்கப்போகிறோம். இதை சரிவர செய்தால் உடல் ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கும்.

ஒரு மாதத்தில் 5 கிலோ எடையைக் குறைக்க முடியுமா?
ஒரு மாதத்தில் 5 கிலோ எடையைக் குறைப்பது சாத்தியம்தான், ஆனால் இதற்கு ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சி தேவை.
நீங்கள் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியைப் பின்பற்றினால், 5 கிலோ எடையைக் குறைக்க முடியாமல் போகலாம், ஆனால் குறைந்தபட்சம் 2 முதல் 4 கிலோ வரை எளிதாகக் குறைத்துவிடலாம் இதை ஒவ்வொரு படிமுறையாக பின்பற்றலாம்.

என்ன செய்ய வேண்டும?
கலோரிகளைக் குறைக்கவும்
- ஒரு மாதத்தில் ஐந்து கிலோ எடையைக் குறைக்க விரும்பினால், முதலில் உணவில் உள்ள கலோரிகளின் அளவைக் குறைக்க வேண்டும். இதற்கு உணவில் பழங்கள், காய்கறிகள், கொழுப்பற்ற புரதம் மற்றும் முழு தானியங்களின் அளவை அதிகரிக்க வேண்டும். இந்த உணவுகள் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளதுடன் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவுகின்றன. இதனால் அதிகம் சாப்பிட தோணாது.
உணவின் அளவு
- அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் தட்டுகள் மற்றும் பாத்திரங்களைச் சிறியதாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றில் உள்ள உணவு பெரியதாகத் தோன்றும். உங்கள் உடலின் பசி மற்றும் வயிறு நிறைந்ததற்கான உணர்வு உண்டாகும். கணினி அல்லது தொலைக்காட்சிக்கு முன்னால் சாப்பிடுவது, சிந்திக்காமல் அதிகமாகச் சாப்பிட உங்களைத் தூண்டக்கூடும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு
- பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்புத் தின்பண்டங்கள் மற்றும் இனிப்பான பானங்களைக் கட்டுப்படுத்துங்கள். இவற்றில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும், கலோரிகள் அதிகமாகவும் உள்ளன. கடைகளில் இதுபோன்றதை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டில் சாலட் இல்லை என்றால் பழங்கள் போன்றவற்றை சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி அவசியம்
- 30 நாட்களில் 5 கிலோ எடையைக் குறைக்க, உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் வலிமைப் பயிற்சி மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சி இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், வேகமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதுடன், தினமும் 10,000 அடிகள் நடக்கவும். இது உடலின் எடையை குறைக்க அதிக உதவி செய்யும்.
நீரேற்றத்துடன் இருங்கள்
- நீரேற்றத்துடன் இருக்க, நாள் முழுவதும் தண்ணீர் அல்லது மூலிகை தேநீர் அருந்தவும். சில நேரங்களில் உங்கள் உடல் தாகத்தை பசியாகத் தவறாகப் புரிந்துகொண்டு, தேவையற்ற தின்பண்டங்களை அதிகமாக உண்ணத் தூண்டுகிறது. உங்கள் பசியைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றொரு வழி, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடியுங்கள்.
வழக்கமான உறக்க நேரத்தைப் பின்பற்றுங்கள்
- தூக்கமின்மை ஹார்மோன் சமநிலையைக் குலைத்து, ஆரோக்கியமற்ற உணவுகளின் மீது உங்களுக்கு நாட்டம் ஏற்பட வழிவகுக்கும். ஒரு வழக்கமான உறக்க நேரத்தை ஏற்படுத்தி, ஒவ்வொரு இரவும் 7-9 மணி நேரம் தூங்குவதை நோக்கமாகக் கொள்ளுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |