வேலை செய்யும் போது snacks சாப்பிடுறீங்களா? அப்போ இந்த ஆபத்து உறுதி
தற்காலத்தில் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவருமே வேலைக்கு செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது.
அதிகரித்து வரும் வாழ்கை சுமையை சமாளிக்கவும் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவும் அனைவுரும் நேரம் காலம் பாரமால் உழைக்கின்றனர்.
வேலை பளு காரணமாக நம்மில் பலரும் உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்தும் தன்மை மிகவும் அருகி வருகின்றது என்றால் மிகையாகாது.
வேலைக்கு செல்லும் அவசரத்தில் காலை உணவை கூட புறக்கணித்துவிட்டு வேலை செய்யும் இடத்தில் ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே வேலை செய்வோர் அதிகம்.
அவ்வாறு வேலை செய்யும் போது ஸ்னாக்ஸ் வாப்பிடும் பழக்கத்தால் ஏற்படகூடிய பாதக விளைவுகள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்கக்லாம்.
பாதக விளைவுகள்
பொதுவாகவே சிலர், வீட்டில் சாப்பிட நேரமில்லாததால், கடைகளில் கிடைக்கும் துரித உணவுகளையும் அதிக எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளையும் வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகள் சுவையாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
தினசரி காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. அதைவிட முக்கியம் தினசரி ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும்.
தற்காலத்தில் பலரும் காலை உணவைத் தவிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறான விடயம்.
காலை உணவு சாப்பிடவில்லை என்றால், வயிற்றில் ஒருவிதமான இரசாயனங்கள் உருவாகி அத இறைப்பையின் தசையை சேதமாக்குகின்றது. இது அல்சர் போன்ற பாரிய பிர்ச்சினைகளை உருவாக்குகின்றது.
தற்போது பலர் தாங்கள் பணிபுரியும் இடத்தில் கூட வேலை செய்து கொண்டே ஸ்நாக்ஸ் சாப்பிடுகின்றனர். இதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினை ஏற்படுவதற்காக வாய்ப்பு அதிகரிக்கின்றது.
விசைப்பலகையை பயன்டுத்தும் போது உணவு சாப்பிடுவதால் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் மற்றும் தொற்று நோயை ஏற்படுத்தக் கூடிய கருமிகள் வயிற்றினுள் செல்கின்றது. இதனால் அபாயகரமான தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது.
இவ்வாறு ஸ்நாக்ஸ் சாப்பிடும் பொது பசியற்ற நிலை உருவாகிவிடும். இதனால், நேரத்துக்குச் சாப்பிட வேண்டும் என்ற தேவை இல்லாமல் போகின்றது.
இதனால் சரியான நேரத்தில் வயிற்றில் சேர வேண்டிய ஆரோக்கியமான ரசாயனங்கள் வெளியேறுவதில்லை. அது உடலின் பல பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே ஏதாவது சாப்பிட வேண்டும் என தோன்றும் போது வேலையை நிறுத்திவிட்டு கைகளை நன்றாக கழுவிய பின்னர் ஆரோக்கியமான முறையில் சாப்பிட்டு பின்னர் வேலை செய்வதால் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடிவதுடன் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
முடிந்தவரை snacks சாப்பிடுவதை தவிர்த்து கொள்வதே சிறந்தது. அது கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரும் கேட்டை விளைவிக்கின்றது.