கோவையில் கண் திறந்த மாகாளி அம்மன்... திடீர் அதிசயத்தை காண அலையென திரண்ட பக்தர்கள்!
அம்மனின் கண் திறந்ததாக பரவிய தகவலால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை டவுன்ஹால் சிவியர் வீதியில் பிரசித்தி பெற்ற உஜ்ஜயினி மாகாளி அம்மன் திருக்கோவில் உள்ளது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழக்கம் போல் கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வலது கண் திறந்திருப்பதை போல அம்மன் காட்சியளிப்பதாக தகவல் பரவியது.
காட்டுத்தீ போல பரவிய இத்தகவலையடுத்து அங்கு குவிந்த ஏராளமான பொதுமக்கள் மாகாளியம்மனை மனமுருகி தரிசித்துச் சென்றனர். வலது கண் திறந்து இருப்பது போல் எழுந்தருளிய அம்மனின் காட்சியைக் கண்டும் அவர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.
அரங்கேறியுள்ள இச்சம்பவம் தங்கள் வாழ்வில் நல்லது நடக்கும் என்பதற்கான அறிகுறி என்று அப்பகுதி பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.