அடிக்கடி காபி குடிப்பது நல்லதா?
பொதுவாக பலருக்கு ஒவ்வொரு நாளும் காபியுடன்தான் ஆரம்பமாகும். ஒரு நாளில் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறையாவது பருகாதவர்கள் இல்லை, இப்படி அடிக்கடி காபி குடிப்பது நல்லதா?
சோர்ந்து போகும் போது காபி குடிக்க நினைப்பதற்கான காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப் பொருட்கள் இருக்கின்றன.
காபியில் காஃபீன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஒரு நாளுக்கு இரண்டு முறை காபி குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் கேடு விளைவிக்காது. அப்படிக் குடிப்பதால் சில நன்மைகளும் ஏற்படலாம்.
- காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதயநோய், ஈரல்நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும்.
இவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களைக் குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். காபி நலம் தருமா என்ன?
அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் காஃபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும் போது, அதுவே உடல்நலப் பாதிப்புக்குக் காரணமாக அமை ந்துவிடும்.
காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
- ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தின் அளவு குறைவடைந்து
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசசோகை ஏற்படும்.
- காபியில் இருக்கும் சில வே திப்பபொருட்கள் இதயத்துக்கு எதிரானவை .
- தலை வலிக்காகக் குடிக்கப்படும் காபியின் அளவு அதிகமானால்
ஒற்றைத் தலைவலி ஏற்படும்.
- சிலருக்குத் தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். இன்னும் சிலருக்குச்
சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம்
உண்டாகும். இதுவும் ஒரு வகைநோய்தான்.
- ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு அதிகப்படியாகக் காபி குடித்தே தீர
வேண்டும் என்று நினைக்கின்றவர்கள், அவற்றின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.