சாக்ஸ் அணியாமல் ஷூ போடுறீங்களா? அப்போ இந்த பாதிப்புகள் உறுதி
தற்காலத்தில் பெரும்பாலும் ஷூக்களை அணியும் போது சாக்ஸ் பயன்படுத்தும் பழக்கம் மிகவும் அருகி வருகின்றது.
சாக்ஸ் அணியாததால் ஷூக்களை பயன்படுத்துவது பார்ப்பதற்கு அழகாகவும், அவசர நேரங்களில் வெளியில் செல்வதற்கு இலகுவாகவும் இருக்கும்.
ஆனால், இந்த பழக்கம் சில தோல் பிரச்சனைகள் ஏற்பட பிரதான காரணமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சாக்ஸ் இல்லாமல் நீங்கள் ஷூக்களை மட்டும் அணிந்தால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
Socks-யை தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள்
சாக்ஸ் பயன்படுத்தாமல் ஷூக்களை அணிவது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் இது கால்களின் ஆரோக்கியதிற்கும் சௌகரியத்துக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
நீண்ட நேரம் சாக்ஸ் இல்லாமல் சப்பாத்துக்களை அணிந்தால் கால்களில் நிச்சயம் வியர்வை வெளியேறும். அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. சாக்ஸ் இந்த வியர்வையை உறிஞ்சி உங்கள் பாதங்களை உலர செய்வதில் துணைப்புரிகின்றது.
ஆனால் நீங்கள் சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிந்தால் கால்களின் வியர்வை அப்படியே கால்களில் படிந்துவிடுவதால் பூஞ்சை, பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கும். அதனால் கால்கள் விகாரமாக மாற்றமடையலாம்.
சாக்ஸ் அணிவது பாதங்களுக்கும், ஷூக்களுக்கும் இடையில் ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கின்றது. ஆனால் சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு கால்களில் கொப்புளங்கள், அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
இறுக்கமான ஷூக்களை அணியும் போது சாக்ஸை தவிர்ப்பதால் உங்கள் பாதங்களில் காயம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது. இறுக்கமான ஷூக்களுக்கு சாக்ஸ் அணியும் போது உராய்வு தடுக்கப்படுவதால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாது.
சாக்ஸ் இன்றி ஷூ அணிவதால் உங்கள் பாதங்களில் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரிக்கும்.
இதனால் உங்கள் பாதங்களில் இருந்து துர்நாற்றம் ஏற்பட ஆரம்பிக்கும். குறிப்பாக, சாக்ஸ் இல்லாமல் லெதர் ஷூக்களை அணியும் போது துர்நாற்றம் ஏற்படும் பிரச்சினை அதிகரிக்கும் அதனால் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் அசௌகரியம் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |