ஸ்மார்ட்போன் பயனர்கள் இத மட்டும் தொடாதீங்க.. IRCTC எச்சரிக்கை
தற்போது ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
அப்படி வாங்கும் ஸ்மார்ட்போனில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் முன்னர், அதன் பாதுகாப்பு பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வது அவசியம்.
அதிலும் குறிப்பாக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட செயலிகளை பதிவிறக்கம் செய்யும் பொழுது நமது போன்களில் இருக்கும் அம்சங்கள் மற்றும் தகவல்களை திருடப்பட வாய்ப்பு இருக்காது.
மேலும், ஆண்ட்ராய்டு பயனர்களின் பாதுகாப்பு கருதி IRCTC சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு IRCTC என்ன எச்சரிக்கை விடுத்துள்ளது? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டு பயனர்கள்
வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் IRCTC என்ற பெயரில் போலியான செயலிகளின் லிங்க் பரப்படுகிறது. இதனால் பயனர்கள் இது போன்ற செயலிகளை போன்களில் பதிவிறக்கம் செய்வது ஆபத்தானது என IRCTC பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் ரயில் டிக்கெட் புக் செய்ய IRCTC செயலியை வைத்திருக்கிறார்கள். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்தால் தேவை ஏற்படும் பொழுது டிக்கெட்டுகளை மிகவும் எளிமையாக புக் செய்யலாம்.
அதிலும் குறிப்பாக IRCTC செயலியை இந்தியாவில் அதிகமான மக்கள் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்களுக்கான எச்சரிக்கை
இந்த நிலையில் IRCTC போன்று இருக்கும் போலியான செயலியின் APK files டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதால் பதிவிறக்கம் செய்யும் முன்னர் அதன் முழுவிவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் IRCTC எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிவுறுத்தலில், "irctcconnect.apk," என்ற போலியான Software தற்போது பகிரப்பட்டு வருகிறது. IRCTC தோற்றத்தில் இருப்பதால் உங்களின் தகவல்களை திருடலாம். எனவே பதிவிறக்கம் செய்யும் பொழுது கவனம் தேவை.
IRCTC சார்பில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான (கடவுச்சொல்), கிரெடிட் கார்டு எண், ஒடிபி, வங்கி கணக்கு எண், யுபிஐ போன்ற தனிப்பட்ட தகவல்களை கேட்கப்படாது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். play store-ல் பாதுகாப்பான செயலிகள் இருப்பதால் அதன் மூலம் பதிவிறக்கம் செய்வது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |