அலுமினியத் தாளில் சுற்றப்பட்ட சூடான உணவு பாதுகாப்பானதா?
தற்போது கடைகளில் விற்கப்படும் அலுமினியத்தாளில் சுற்றபட்ட ரொட்டி மற்றும் வேறு சூடான உணவுகள் பாதுகாப்பானதா என்பதை விரிவாக பார்க்கலாம்.
அலுமினிய தாளில் சுற்றபட்ட உணவுகள்
மோசமான வாழ்க்கை முறை காரணமாக புற்றுநோய்க்கான ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.
குறிப்பாக சமையலில் பயன்படுத்தப்படும் சில பாத்திரங்கள் மற்றும் அலுமினியம் தகடு போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் என மக்கள் தவறாக நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் இதன் உண்மையான விடயம் பற்றி யாரும் அறிவதில்லை. இதன்படி அறிவியல் ரீதியான விளக்கங்கள் உள்ளன. அலுமினியம் பூமியில் மிகுதியாகக் காணப்படும் உலோகங்களில் ஒன்றாகும்.

இது மற்ற உலோகங்களை விட மிகவும் இலகுவானது என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அலுமினியம் புற்றுநோயை உண்டாக்காது என கூறுகின்றனர்.
சமையல் பாத்திரங்கள் மற்றும் பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படும் அலுமினியம் ஒரு கன உலோகம் அல்ல மற்றும் இது புற்றுநோய்க்கான ஒரு மூலகமும் இல்லை.
மருத்துவ விளக்கம்
அலுமினியம் ஒரு பாரமற்ற உலோகம் இது பெரும்பாலான பொருட்களுடன் வினைபுரிவதில்லை, மேலும் இது உணவுடன் எளிதில் வினைபுரிவதில்லை.
எனவே, அதில் ஒரு சிறிய அளவு மட்டுமே நம் உணவை அடைகிறது. சில அலுமினியத் துகள்கள் நம் உடலில் நுழைந்தாலும், அவை சிறுநீரகங்களால் வெளியேற்றப்படுகின்றன.

இது ஒரு கன உலோகம் இல்லாததால் உடலில் சேராது. அலுமினியம் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம்.
ஆனால் அது புற்றுநோய்க்கான எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. ஒரு சராசரி நபர் 60-80 மி.கி அலுமினியத்தை உட்கொண்டால், அது எந்த பிரச்சனையும் ஏற்படாது, மேலும் சாதாரண உணவு மூலம் அந்த அளவை அடைவது மிகவும் கடினம்" என்று மருத்துவர் விளக்கியள்ளார்.

அலுமினியத்தில் என்ன செய்ய கூடாது
- அலுமினிய பாத்திரங்களில் மிக அதிக தீயில் உணவை சமைக்க வேண்டாம்.
- அலுமினியத்தில் அதிக புளிப்பு அல்லது அமிலத்தன்மை கொண்ட உணவுகளை சமைக்க வேண்டாம்.
- ஊறுகாய் போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருட்களை அலுமினிய கொள்கலன்களில் நீண்ட நேரம் சேமிக்க வேண்டாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |