தேன் நெல்லிக்காய் உண்மையிலேயே உடலுக்கு நல்லதா? ஷாக்கிங்கான செய்தி
பொதுவாகவே எல்லோரும் தேன் நெல்லிக்காயை விரும்பி சாப்பிடுவதுண்டு. இதை யாராவது இனிப்பாக இருப்பதனாலும் சுவையாக இருப்பதனாலும் சாப்பிடுவதாக சொன்னீர்கள் என்றால் இந்த கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதுதாங்க.
ஆனால் பலர் இந்த தேன் நெல்லிக்காயை வைட்டமின்-சி யை பெற்றுக்கொள்வதற்காக சாப்பிடுவதாக கூறுகின்றார்கள். உண்மையில் இதில் வைட்டமின் சி இருக்கிறதா? என்றால் பலபேரின் பதில் ஆம் என்று தான் இருக்கும்.
வெப்பத்தில் அழிவடையும் வைட்டமின் சி
ஆனால் வைட்டமின் -சி வெப்பத்தில் அழிவடையக் கூடியது என்பதே அறிவியல் ரீதியான உண்மை. தேன் நெல்லிக்காய் செய்யும் போது முதலில் நெல்லிக்காயை அவிப்பார்கள். இதிலேயே நெல்லிக்காயில் அடங்கியுள்ள 75 சதவீதமான வைட்டமின் -சி அழிவடைந்துவிடுகின்றது.
பின்னர் அதில் தேன் கலந்து வெயிலில் ஊறவைப்பார்கள், இதனால் சூரிய ஒளி காரணமாக மீதமுள்ள 25 சதவீதம் வைட்டமின் -சி சத்தும் அழிவடைந்துவிடுகின்றது என்பதே உண்மை.
இனிமேலாவது வைட்டமின்- சி சத்துக்களை பெற வேண்டும் என நினைத்ததால் நெல்லிக்காயை காயாகவே சாப்பிடுங்கள், அப்போது 2 அல்லது 3 நெல்லிக்காய் சாப்பிட்டாலே போதும் கிட்டத்தட்ட 400 மி.கி வைட்டமின்- சி உடலுக்கு கிடைத்துவிடும்.
இத்த அளவு நாளொன்றுக்கு சராசரியாக மனித உடலுக்கு தேவையான வைட்டமின்- சி சத்தின் அளவை குறிக்கும்.
இதற்கு பிறகு தேன் நெல்லிக்காயை கண்டவுடன் வைட்டமின் -சி நிறைந்த உணவு என நினைக்காதீர்கள் எந்த பொருளையும் அதன் தன்மையை அறிந்து பயன்படுத்தும் போதே அதன் முழுமையான பலனை பெற முடியும்.