பாலுடன் பெருங்காயம் கலந்து குடிப்பது இவ்வளவு நன்மையா? அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
Kidney Disease
Constipation
By Kishanthini
பொதுவாக சமையலைப் பொறுத்தவரை பெருங்காயம் வாசனைக்காக மட்டுமல்ல வாயுத் தொந்தரவு, செரிமானப் பிரச்சனைகளை சரி செய்யும் மருந்தாகவே பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இது கர்ப்பபை பிரச்சனைகள், மாதவிடாய் சிக்கல்கள், பாலுணர்வை தூண்டுதல் போன்ற விஷயங்களுக்கும் பெருங்காயம் அருமருந்தாக திகழ்கின்றது.
அதிலும் இதனுடன் பால் சேர்த்து குடிக்கும் போது இன்னும் பல பலன்களை உடலுக்கு வழங்குகின்றது.
பாலில் பெருங்காயத்தை கலந்து குடிப்பது வயிற்று பிரச்சனைகள் மற்றும் குடல் சார்ந்த செரிமான இயக்கத்தை சீராக்க உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில் தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்? இதில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
குடிக்கும் முறை
- ஒரு கிராம் தூய பெருங்காயத்தை ஒரு மண் பானையில் தண்ணீரில் 72 மணி நேரம் ஊற வைக்கவும்.
- அது சரியாகக் கரைந்ததும், ஒரு ஸ்பூன் தண்ணீரை 200 மில்லி வெதுவெதுப்பான பாலுடன் கலந்து, காலை மற்றும் இரவு உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.
- பாலுடன் பெருங்காயத்தை கலந்து குடிக்கும் போது, துவரம் பருப்பு, கத்தரிக்காயை தவிர்க்கவும்.
நன்மைகள்
- குடல் வறட்சியை நீக்கும்.
- அஜீரணம், வாயுத்தொல்லை, வயிற்று வலி, வாந்தி, விக்கல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் வழங்கும்.
- பெருங்காயம் சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டும், மலம் கட்டுதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
- மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றில் வீக்கம் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
- செரிமானத்திற்கான குடல் இயக்கத்தையும் தூண்டுகிறது
- கல்லீரல் செயல்பாட்டை தூண்டி உடலை இலகுவாகவும் சுறுசுறுப்பாகவும் மாற்றுகிறது
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US