அதிக விலைக்கு விற்பனையாகும் கரப்பான் பூச்சி பால்.. அதில் அப்படி என்ன உள்ளது?
பொதுவாக வீடுகளில் கரப்பான் பூச்சியை கண்டாலே பத்தடி கத்திக் கொண்டு ஓடும் நபர்கள் இன்றும் எமது சமூகங்களில் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் பலருக்கு கரப்பான் பூச்சி என்றாலே அருவருப்பான உணர்வு வந்து விடும்.
இப்படி இருக்கும் பட்சத்தில், கரப்பான் பூச்சியின் பால் மிகவும் அடர்த்தியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கை சேர்மங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
Super foods-க்கு இணையான மதிப்பு கரப்பான் பூச்சி பாலூக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பெர்ரி, கொட்டைகள் மற்றும் இலை கீரைகள் போன்ற உணவுகளின் வரிசையில் இந்த பாலும் அடங்குகிறது. கரப்பான் பூச்சி பால் எனக் கூறும் பொழுது பலரும் இதனை பாலாக நினைக்கலாம்.
ஆனால் அது உண்மையில் பால் அல்ல, மாறாக கரப்பான் பூச்சி சந்ததியினரின் வயிற்றுக்குள் இருக்கும் படிகமாக்கும் மஞ்சள் திரவமாகும். இது பசிபிக் வண்டு கரப்பான் பூச்சியிலிருந்து (டிப்லோப்டெரா பங்க்டாட்டா) பெறப்பட்ட இந்த பாலில் புரதங்கள் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் நல்ல சர்க்கரைகள் ஆகியன நிரம்பியுள்ளன.
இது போன்று கரப்பான் பூச்சி பால் பற்றிய சில அறிவியல் உண்மைகளை தொடர்ந்து எமது பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

கரப்பான் பூச்சி பாலின் மகத்துவம்
ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது என கூறப்படும் கரப்பான் பூச்சி பால் எருமை பாலை விட மூன்று மடங்கு அதிகமான சக்தியை கொண்டுள்ளது.

மருத்துவர் விளக்கம் கொடுத்த பொழுது, “ பசிபிக் வண்டு கரப்பான் பூச்சி, புரதம் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் போன்றவற்றை உற்பத்திச் செய்கிறது. செரிமான செயற்பாட்டின் பொழுது இது நீடித்த ஆற்றலை விநியோகம் செய்கிறது.
எருமை பாலில் உள்ள கலோரிகளை விட இதில் அடர்த்தியான புரதங்கள், கொழுப்புக்கள், கிளைகோசைலேட்டட் சர்க்கரைகள் மற்றும் ஒலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள் உள்ளன. இவை உயிரணு பழுது மற்றும் வளர்ச்சிக்கு முக்கியம்..” எனக் கூறியிருந்தார்.
மனித நுகர்வுக்கு பாதுகாப்பானதா?
தற்போது பிரபலமாக இருக்கும் கரப்பான் பூச்சி பால் மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு பாதுகாப்பானது அல்ல. ஒவ்வாமை மற்றும் மாசுபாடு அபாயங்கள் போன்ற காரணங்களால் இந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |