இதய நோய்களுக்கான clopidogrel மருந்து குறித்து அதிர்ச்சி தகவல்! விளக்கும் மருத்துவர்
இயத தமனிகளில் ரத்தம் உறைவதை தடுக்க, இதய நோயாளிகளுக்கு வழங்கப்படும், clopidogrel எனும் மருந்து தென்னிந்தியர்களில் சுமார் 31 சதவீதமானவர்களுக்கு ஆற்றல் காட்டவில்லை என சமீபகாலமாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது இந்த மருந்து உடலில் ஏன் ஆற்றல் காட்டுவது குறைகின்றது என்பது குறித்து மருத்துவ நிபுணர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதய நோயாளிகளுக்கு பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்து தான் க்ளோபிடோக்ரல். சமீபத்தில், இது அனைவருக்கும் திறம்பட செயல்படுகிறதா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
க்ளோபிடோக்ரல், பொதுவாக அதன் பிராண்ட் பெயரான பிளாவிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது, இது மார்பு வலி, புற தமனி நோய், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நிலைகளில் இரத்தக் கட்டிகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மருந்தாகும்.

இரத்தக் கட்டிகளைத் தடுப்பதில் ஆற்றல் காட்டும் இந்த மருந்து இதய நோய்களின் ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிரதான இடத்தை வகிக்கின்றது.
மார்பு வலி, புற தமனி நோய், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நிலைகளில் இரத்தக் கட்டிகளைத் தடுக்க குளோபிடோக்ரல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை பயன்படுத்தும் இதயநோயாளிகளாக தென்னிந்தியர்களில் சுமார் 31 சதவீதமானவர்களுக்கு எந்த பயனையும் கொடுக்கவில்லை.

பொதுவாக மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆஸ்பிரின் போன்ற கூடுதல் மருந்துகள் தேவைப்படுகின்றன.அதாவது இரத்தம் உறைவதை க்ளோபிடோக்ரல் தடுப்பதில் ஆற்றல் காட்டவில்லை என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.
க்ளோபிடோக்ரல் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் பதில்கள் ஏன் மாறுபடலாம் என்பதை டாக்டர் அருண்குமார் தெளிவாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்கியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |