எங்களின் உயிர் எப்போ போகும்னு எங்களுக்கு தெரியாது! பத்மஸ்ரீ விருதிற்கு தயாராகும் பாம்பு பிடி வீரர்கள்
கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடித்து வரும் இரண்டு வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பத்மஸ்ரீ விருதை எதிர்பார்க்கவில்லை
இதுகுறித்து அவர்கள் பேசுகையில், “ பாம்பு பிடிப்பவர்களின் ஊரில் இருக்கும் “கன்னிமா கோயில்” தான் எங்களை இவ்வளவு காலமாக பாதுகாக்கிறது.
பாம்புகளை பிடிக்காமல் அப்படியே விட்டு விட்டால் காலப்போக்கில் அது பெரியதாகி கிராம பக்கங்களில் அலைய ஆரம்பித்து விடும்.
பாம்பு பிடிக்கும் போது கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் இது நம்மை தாக்கி விடும். இவ்வாறு தாக்குப்பட்டால் ஒரு வகையான மூலிகையை கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை சாப்பிட்டு காட்டை விட்டு வெளியே வந்து அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த தொழிலை மிகவும் சிறப்பாகச் செய்து வருவதால் அரசாங்கம் எங்களுக்கு ஒரு அட்டைக் கொடுத்துள்ளது அதனை வைத்துக் கொண்டால் பிரச்சினை இருக்காது. மேலும் பத்மஸ்ரீ விருதும் எங்களுக்கு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை” எனக் கூறியிருக்கிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருவதுடன், இவர்களின் துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.