Iron Box கறை மாயம்! வீட்டிலேயே செய்யக்கூடிய அசத்தல் டிப்ஸ்
நம்மிள் பலரின் வீட்டில் Iron box அடியில் கருப்பாக இருப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது.
துணியை கருகல் Iron box-ல் ஒட்டி இருப்பதால் அது புதிதாக Iron செய்யும் பொழுது துணிகளில் ஒட்டி நாசம் செய்து விடும்.
ஆசையாக அணிவதற்காக கொண்ட வந்த ஆடையில் கருப்பு நிறம் அல்லது பழுப்பு நிறத்தில் இப்படி இருப்பது வேதனையை ஏற்படுத்தும்.
அப்படி உங்கள் வீடுகளில் இருந்தால் புதிய Iron box வாங்க வேண்டிய தேவையில்லை. அதனை வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு சுத்தம் செய்யலாம்.

அந்த வகையில், கறை படிந்த Iron box-ஐ எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
Iron box-ஐ சுத்தம் செய்வது எப்படி?
1. Iron box-ல் கறை படிந்து விட்டது என சாதாரணமாக இல்லாமல் ஒரு பஞ்சை எடுத்து எலுமிச்சை சாற்றில் நனைத்து Iron box-ல் கருகிய இடத்தில் தேய்க்கவும். இது Iron box-ல் உள்ள கறையை இல்லாமல் செய்து விடும். அதன் பின்னர் ஒரு சுத்தமான துணியால் Iron box-ஐ நன்றாக துடைத்து எடுக்கவும்.
2. உங்கள் வீடுகளில் வீசுவதற்காக வைத்திருக்கும் Iron box-ஐ கூட புதிதாக மாற்றும் சில பொருட்கள் உங்கள் வீடுகளிலேயே உள்ளது. உதாணரமாக பேக்கிங் சோடா, பற்பசை அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற பொருட்களை கூறலாம். இவை விலைக் குறைவாகவும் கடைகளில் கிடைக்கும்.

3. சமையலறையில் உள்ள முக்கிய பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படும் சோடாவை கொண்டு, Iron box-ஐ சுத்தம் செய்யலாம். சிறிய பவுலில் பேக்கிங் சோடாவை போட்டு, நன்றாக கலந்து விட்டு, Iron box-ல் கறை உள்ள இடங்களில் மாத்திரம் தேய்த்து எடுத்தால் அந்த இடம் பார்ப்பதற்கு பளபளப்பாக மாறி விடும். எரிந்த அழுக்குகளை கூட எளிதில் இல்லாமல் செய்து விடும்.
4. பற்பசையை Iron box-ல் கறை உள்ள இடங்களில் தடவி மென்மையான துணியால் துடைத்தால் Iron box-ல் உள்ள கறைகள் இலகுவாக நீங்கி விடும். இந்த முறையை பயன்படுத்தி, இரும்பில் உள்ள அடுக்கையும் எளிமையாக அகற்றி விடலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |