வெளிநாட்டு மண்ணில் தீபக் ஹூடாவின் முதல் சதம்... பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!
இந்திய அணி அயர்லாந்து அணிக்களுக்கிடையேயான 2வது போட்டி டப்ளின் நகரில் சற்று நிமிடங்களுக்கு முன்னர் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதலாவதாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் இஷான் கிஷன் 3 ரன்களில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்ததாக சாம்சனுடன், தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடியால் ரன் மளமளவென குவிந்தது. அதிரடியில் மிரட்டிய தீபக் ஹூடா மற்றும் சாம்சன் ஆகியோர் தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர்.
இந்த ஜோடியில் சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து தீபக்ஹூடாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். பின்னர், அதிரடி காட்டி வந்த தீபக் ஹூடா 55 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
மறுமுனையில் அதிரடியாக துவங்கிய சூர்யகுமார் யாதவ் 15 (5) ரன்களில் வெளியேறினார். அவரைதொடர்ந்து தீபக் ஹூடாவும் 57 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் (0), அக்சர் பட்டேல் (0), ஹர்சல் பட்டேல் (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.
இறுதியில் இந்திய அணி, 20 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ரன்கள் எடுத்தது. 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, ஸ்டிரிலிங் அதிரடியாக ஆடி 40 ரன்களை அடிக்க, மறுமுனையில் ஆண்ட்ரூ பால்பிர்னி 60 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் ஆடிய, ஹாரி டெக்டர் 39 ரன்களும், கடையிசாக ஆடிய ஜார்ஜ் டோக்ரெல் 34 ரன்களும், மார்க் அடேர் 23 ரன்களுடன் கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்கள்.
இதனால் இந்திய 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய, முதல் டி20 100 ரன்களை அடித்த தீபக் ஹூடா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இந்திய தொடரையும் வென்றது.
Umran Malik has won the game for India. Ireland also deserves to win this match. They played high class cricket against this strong Indian side.#UmranMalik #IREvINDpic.twitter.com/xfQiNzuN18
— Cricket Hotspot (@AbdullahNeaz) June 28, 2022