வெர்ஜின் பொண்ணுங்களா நீங்க? இளம்பெண்களிடம் சர்டிபிகேட் கேட்கும் நாடு!
திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்கள் வினோதமான ஒரு மருத்துவ டெஸ்டை எடுக்கவேண்டும் என ஈரான் நாட்டு சட்டம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
ஈரான் நாட்டில் வினோதமான ஒரு போக்கு சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள பெண்கள் தேவையில்லாமல் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும், உலக சுகாதார அமைப்பின் அழுத்தத்திற்குப் பின்னரும் அங்கு வினோத போக்கு தொடர்கிறது.

GETTY IMAGES
கன்னித்தன்மை உள்ளதா?
அதாவது, ஈரான் நாட்டில் ஆண்கள் தங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் கன்னித்தன்மை உடன் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் எனக் கேட்கிறார்களாம்.
எனவே இதுபோன்ற, போக்கு சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது. இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று உலக சுகாதார அமைப்பு கூறும் போதிலும் இந்தப் பழக்கம் அதிகரித்தே வருகிறது.
இதனிடையே, இந்த கன்னித்தன்மை சோதனை அறிவியல்பூர்வமானது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கூறி வரும் போதிலும், ஈரான், ஈராக், இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இந்த நடைமுறை தொடர்கிறது.