சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலாகும் காணொளி!
சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் வெற்றி வசந்த் தனது பிறந்த நாளை வீட்டிலும், படப்பிடிப்பு தளத்திலும் வெகு விமர்சையாக கொண்டாடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வெற்றி வசந்த்
சின்னத்திரையில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தான் வெற்றி வசந்த். youtube மூலம் பிரபலமாகிய இவர் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இந்த சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. முத்து என்கிற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் கலக்கிக்கொண்டிருக்கும் நிலையில், சின்னத்திரை நடிகை வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை வைஷ்ணவியை அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 20) சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றியின் பிறந்தநாள் கொண்டாட்டம் படப்பிடிப்பு தளத்திலும் இடம்பெற்றதுடன், காதல் மனைவியும் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை SURPRISE ஆக ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார்.
குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பெருமளவான ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |