iQoo Neo 9 Pro Smartphone வெளியீட்டு தேதி அறிவிப்பு.., விலை, சிறப்பம்சங்கள் இதோ
iQoo Neo 9 Pro மாடல் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
iQoo , தனது சமூக வலைத்தள பக்கங்களின் வாயிலாக புதிய iQoo Neo 9 Pro Smartphone பிப்ரவரி 22 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மொபைலை ஆன்லைன் வணிக தளமான Amazon இந்தியா வாயிலாக விற்பனைக்கு கொண்டுவருகிறது.
இதன் விலை
புதிய iQoo Neo 9 Pro Smartphone-ன் 12GB RAM, 256GB storage வகையின் விலை ரூ.35,000 என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 16GB RAM, 512GB storage வகையின் விலை ரூ.40,000 ஆகவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சங்கள்
iQoo Neo 9 Pro Smartphone-ல் Android 14 அடிப்படையிலான Funtouch இயங்குதளம் கொடுக்கப்படும்.
இதில் 6.78 inch AMOLED screen 144Hz refresh rate உடன் இருக்கும்.
16GB வரையிலான LPDDR5X வகை Latest RAM, 1TB வரையிலான UFS 4.0 Storage புதிய Neo மாடலில் இடம்பெற்றிருக்கும்.
Camera-ஐ பொருத்தவரை 50Megapixel OIS Sony IMX920 Primary sensor இருக்கும். Smartphone-ஐ திறன்பட இயக்க 5,160 mAh திறன் கொண்ட Battery வழங்கப்படும்.
Selfie, video அழைப்புகளுக்காக 16 megapixel front camera display punch hole-ல் இடம்பெறும். மேலும் இதில், 120W Fast charger உடன் கிடைக்கும்.
குறிப்பாக இந்த Smartphone சீனாவில் MediaTek Dementia Chipset உடன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் Qualcomm Snapdragon 8 Gen 2 உடன் வருகிறது.
Amazon இந்தியா தளத்தில் தற்போது இந்த Smartphone வெளியீட்டிற்கான பக்கம் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |