ipl2022; பெங்களூரு அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் இவர்களா? முன்னாள் வீரரின் கணிப்பு!
அடுத்த ஆண்டின் ஐபில் (ipl) 2022-க்கான போட்டியில் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதனிடையே, பெங்களூர் (Rcb) அணியில் தக்க வைக்கப்பட வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா (aakashchopra) ஓபனாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் (ipl) 2022-க்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து அணிகளும் எந்த வீரரை தக்கவைத்து கொள்ளலாம்..? எந்த வீரரை அணியிலிருந்து நீக்கலாம்..? எந்த புதிய வீரர்களை அணியில் சேர்க்கலாம்? என்ற திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்து வருகிறது.
மேலும், அடுத்த ஆண்டின் ஐபிஎல் அணியில் புதிதாக 2 அணிகள் இணைந்துள்ளதால் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலமே மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில், பெங்களுரூ அணியில் எந்த வீரரை தக்கவைக்கலாம் என்பதை பற்றி முன்னாள் வீரர் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.
அதில், என்னைப்பொருத்தவரை பெங்களூரு அணியில் எந்த வீரரை தக்க வைக்கலாம் என்று கேட்டால் முதல் இரண்டு வீரர்களாக விராட் கோலி (viratkohli) மற்றும் சஹால் ஆகிய வீரர்களை தான் சொல்வேன், அடுத்தபடியாக முகமது சிராஜ்/ஹர்ஷல் படேல் மற்றும் தேவ்தாத் படிகள் ஆகிய இரண்டு வீரர்களையும் தேர்ந்தெடுப்பேன்.
மேலும், ஏன் மேக்ஸ்வெலை (maxwell) தேர்வு செய்யவில்லை என்பதற்கு, பதிலாக எனக்கு மேக்ஸ்வெல் மீது 100% சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இல்லை, அவர் கடந்த தொடரில் சிறப்பாக விளையாடினார் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது, ஆனால் வருகிற போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்து இருக்கிறார்.
மேலும், பெங்களூர் அணி முன்னாள் கேப்டன் டேனியல் விக்டோரி (daniel vettori) இதைப்பற்றி தெரிவிக்கையில், ஆர்சிபி யார்யாரை தக்க வைக்க வேண்டும் என்பது குறித்து பேசுகையில் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி, யுஸ்வேந்திர சாஹல், கிளென் மேக்ஸ்வெல், ஹர்ஷல் படேல் ஆகிய நான்கு பேரை தக்கவைத்தால், அது சிறந்த முடிவாக இருக்கும்.
சில மாதங்களுக்கு முன்பு என்னை கேட்டிருந்தால், யுஸ்வேந்திர சாஹலை வேண்டாம் என கூறியிருப்பேன். இப்போது அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவர் நிச்சயம் தேவை” எனக்கூறியுள்ளார்.
இதெல்லாம், ஒரு பக்கம் இருந்தாலும், ஏபிடிவில்லியர்ஸ் இல்லாத அணியாக யாரை அவர் இடத்தில் தேர்வு செய்வது என பெங்களூரு அணி தரப்பில், எய்டன் மார்க்கரம், அல்லது ஜாஸ்பட்லர், இல்லையெனில், பர்ஸ்டோ இவர்களை எடுக்க அணி நிர்வாக ஆலோசித்து வருகிறதாம்.