ஐபிஎல் 2022: மும்பை அணியின் உத்தேச ப்ளேயிங் 11 இதுதானா?
ஐபிஎல் 2022-க்கான ஏலம் நடந்துமுடிந்த நிலையில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இளம் வீரர் இஷான் கிஷனை 15.25 கோடிக்கு ஏலத்தி எடுத்திருந்தது.
அதேப்போல், யாரும் எதிர்பாராத வகையில், டிம் டேவிட்டை 8.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்து ஆச்சரியபட வைத்தது. மும்பை அணியி மொத்தம் அனுமதிக்கப்பட்ட 90 கோடிகளில் 25 வீரர்களை வாங்குவதற்கு அந்த அணி நிர்வாகம் 89.90 கோடிகளை செலவு செய்துள்ளது.
இந்த 25 வீரர்களில் 17 இந்தியர்களும் 8 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். ஏலத்தின் முடிவில் அந்த அணியிடம் 10 லட்சம் மீதிதொகை உள்ளது.
மும்பை இந்தியன்ஸின் முழு அணி
ரோகித் சர்மா (கேப்டன் – 16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கிரண் பொல்லார்ட் (6 கோடி), இஷான் கிஷான் (15.25 கோடி), டிம் டேவிட் (8.25 கோடி), ஜோபிரா ஆர்ச்சர் (8 கோடி), தேவால்டு ப்ரேவிஸ் (3 கோடி), டேனியல் சம்ஸ் (2.6 கோடி), திலக் வர்மா (1.7 கோடி),
முருகன் அஷ்வின் (1.6 கோடி), ட்யமல் மில்ஸ் (1.5 கோடி), ஜெயதேவ் உனட்கட் (1.3 கோடி), ரிலே மெரிடித் ( 1 கோடி), பாபின் ஆலன் (75 லட்சம்), மயங் மார்கண்டே (65 லட்சம்), சஞ்சய் யாதவ் (50 லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர் (30 லட்சம்), பசில் தம்பி (30 லட்சம்), அர்ஷத் கான் (20 லட்சம்), அன்மோல்ப்ரீட் சிங் (20 லட்சம்), ராமந்தீப் சிங் ( 20 லட்சம்), ராகுல் பௌதீ (20 லட்சம்), ஹ்ரித்திக் ஷாக்கீன் (20 லட்சம்), ஆர்யன் ஜுயல் (20 லட்சம்)
இந்த மெகா அணியில் உத்தேச ப்ளேயிங் 11 பற்றி பார்ப்போம்...
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கிரண் பொல்லார்ட், சஞ்சய் யாதவ், டானியல் சம்ஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ்/ரிலே மெரிடித்.