சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காதது ஏன்? அணிக்கு திரும்ப கடைசி வாய்ப்பு;
ஐபிஎல் 15-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய பிராவோ, அம்பட்டி ராயுடு, தீபக் சஹர் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டு பிளசிஸை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதன்பின்னர் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரரான சின்ன தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஐபிஎல் மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சிஎஸ்கே அணி உட்பட எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்காதது ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
சிஎஸ்கே அணிக்காக ரெய்னா பல போட்டிகளில் வெற்றி பெற சுரேஷ் ரெய்னா முக்கிய காரணமாக இருந்துள்ளார். அதிலும், குறிப்பாக 2014-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் 25 பந்துகளில் 87 ரன்கள் (12 பவுண்டரி 6 சிக்சர்கள்) அடித்து மிரள வைத்திருப்பார்.
ஆனால், அந்த போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும், அவரின் எதிர்பாராத ரன் அவுட் மேட்சை மாற்றியது. எதிரணிக்கு மிகப்பெரிய பயத்தை காட்டினார். சிஎஸ்கே அணி எடுக்காதது ஏன்? சுரேஷ் ரெய்னா கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் உரசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, தனக்கு பால்கனி உள்ள அறை கொடுக்கவில்லை என சிஎஸ்கே நிர்வாகத்துடன் சுரேஷ் ரெய்னா சண்டையிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாகவே சிஎஸ்கே அணி இவரை ஏலத்தில் எடுக்காமல் விட்டு இருக்கலாம் என ரசிகர்கள் ஒரு பக்கம் கூறினாலும், அவர் ரன் எடுக்க தடுமாறிகிறார்.
கடந்த ஐபிஎல் போட்டிகளில் கூட அவர் பெரியதாக விளையாடவில்லை. இதனாலே ஆரம்ப ஏலத்தில் அவரை சிஎஸ்கே அணி புறக்கணித்தது.
இன்றைய இரண்டாவது நாள் ஏலத்தில், (13.02.2022) ஐபிஎல் ஏலத்தில் அவர்களது அடிப்படை விலையில் எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அப்போது சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னாவை மீண்டும் தக்க வைக்க அதிக வாய்ப்பிருக்கிறது.