ஸ்கெட்ச் போட்டு கொல்கத்தா அணியை தட்டி தூக்கிய தோனி! 4 வது முறையாக கோப்பையை வென்றது சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 192 ரன்கள் அடித்தது.
சென்னை அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த டூ பிளிசிஸ் 86 ரன்கள் அடிதத்தார். மற்றவர்களான ருதுராஜ் 32 ரன்களுடனும், உத்தப்பா 31 ரன்கள், மொயின் அலி 37 ரன்களை அடித்தனர்.
192 ரன்கள் எடுத்தால் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய, கொல்கத்தா அணியினர், சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐய்யர் சென்னை பவுலிங்கை எல்லாம் பக்கமும் வெளுத்து வாங்க, வெங்கடேஷ் ஐயர் ஜடேஜாவின் ஓவரின் 50 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
இதன் பின்னர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த கொல்கத்தா அணியினர், சுப்மன் கில் 51, மட்டும் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 165 ரன்களுக்கு 9 விக்கெட்டை பறிகொடுத்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
சிறப்பாக பவுலிங் செய்த ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். இதனால், சென்னை அணி 4 வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதனால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
Again the dad's Army has done it.
— BCCI (@BCCI_2663) October 15, 2021
It was really amazing to see many legends play together.
This may be the last time we see them play.
Happy for @ChennaiIPL
Congrats #CSK #CSKvKKR #CSKvsKKR #Dhoni pic.twitter.com/CTLHz73AXD