ஐபிஎல் தொடங்கும் முன்பே சாதனை படைத்த CSK
CSK அணியின் சந்தை மதிப்பு அதன் தாய் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸையும் தாண்டிச் சென்று சாதனை படைத்துள்ளது.
IPL அணியான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி CSK அதனுடைய தாய் நிறுவனமான India Cements ஐ விட அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. வெள்ளியன்று இந்தியா சிமெண்ட்ஸ் சந்தை மதிப்பு ரூ.6,869 கோடியாக இருந்தது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐபிஎல்15வது பதிப்புக்கு முன்னதாக, அதன் வெற்றிகரமான உரிமையாளர்களில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே நாட்டின் முதல் விளையாட்டு unicorn என்ற பெருமையை பெற்றுள்ளது. சந்தையில் CSK பங்குகள் ரூ.210-225 விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

CSK அணியின் சந்தை மதிப்பு அதன் தாய் நிறுவனமான India Cements தாண்டிச் செல்ல வழிவகுத்த இரண்டு முக்கிய காரணங்கள், Dhoni தலைமையிலான அணி Dubai யில் நான்காவது IPL பட்டத்தை தட்டி சென்றது ஆகும். மற்றும் இரண்டு புதிய உரிமையாளர்கள் வரவிருக்கும் சீசனில் சாதனை விலையில் சேர்க்கப்பட்டதுமே ஆகும்.
இது குறித்து India Cements ன் நிர்வாக இயக்குநரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் BCCI முன்னாள் தலைவருமான என். சீனிவாசன் வெள்ளியன்று கூறியதாவது:
CSK பிராண்ட் இந்தியா சிமென்ட்ஸையும் கடந்து விஞ்சி விட்டது. அமெரிக்காவில் தனியார் லீக்குகளின் வரலாற்றைப் பார்த்தால், அது எல்லாவற்றையும் மிஞ்சுவதாக இருக்கும்.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கிரிக்கெட் மீதான மோகம் அதிகம். குறிப்பாக இளைஞர்களுக்கு கிரிக்கெட் என்றல் கொள்ளை பிரியம் என்று அவர் தெரிவித்தார்.