இலங்கை வீரர் ஹசரங்காவை பெங்களூரு அணி எடுக்க காரணம் என்ன? RCB அணியின் அசத்தலான ப்ளான்
ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்ப்பாராத நிலையில், பல வீரர்கள் பல அணிகளுக்கு மாறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
எதிர்ப்பார்த்த சில வீரர்கள் எடுக்காமல் போனது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இந்த நிலையில், டி20 போட்டிகளில் சமீப நாட்களாக ஜொலித்து வரும் வனிந்து ஹசரங்காவை பெங்களூரு அணி 10.75 கோடி எடுத்ததற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
மேலும், பல இலங்கை கிரிக்கெட் பிரபலங்கள் ஹசரங்காவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில், இலங்கை வீரர் தினேஷ் சண்டிமால் ட்விட்டர் பதிவில், நீங்கள் இதற்கு தகுதியானவர் தான், விளையாட்டை நேசியுங்கள். வாழ்த்துக்கள் என தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
Well deserved wanindu @Wanindu49 ? just enjoy your game.. all the best ? #IPL2022MegaAuction pic.twitter.com/XjvhE11w5y
— dinesh chandimal (@chandi_17) February 12, 2022
பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்தே ஹசரங்காவை எடுக்க முயற்சித்து வந்தது. அதன் பின்னர் ஒரு வழியாக அவரை 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவரை இவ்வளவு விலை கொடுத்து எடுக்க காரணமே, சமீபத்தில் நடைபெற்ற ஜூலை 20210ம் ஆண்டில் இந்தியா இலங்கை போட்டியின் போது ஹசரங்கா சிறப்பாக பந்துவீசி தொடர் நாயகன் விருதை பெற்றார்.
அதன்பின்னர், ஆஸ்திரேலியா BBL தொடரில் அனைத்து போட்டிகளும் சிறப்பாக விளையாடி அலறவிட்டார். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வந்தார்.
எனவே பெங்களூரு அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டரை தான் ரொம்ப நாளாக தேடி வருகிறது. இதனாலே அவரை அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளனர்.
ஏற்கனவே பெங்களூரு அணியில் விளையாடி ஜொலிக்கவில்லை என்றாலும் இந்த முறை அவரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி மேக்ஸ்வெல் அந்த அணியில் ஜொலிப்பதால் இவரின் பங்கு பெரியதாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்கிறார்கள்.