ராஜஸ்தான் அணியை அலறவிட்ட தினேஷ் கார்த்தி ஷாபஸ்.. பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபி வெற்றி
பெங்களூர் அணி பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியை இன்று மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்க்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு வழக்கம் போல், ஜாஸ் பட்லரும், ஜெய்ஸ்வாலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் வெறும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையை கட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தேவ்தட் படிக்கல் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்ததாக களத்திற்கு வந்த அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து களத்திற்கு வந்த சிம்ரன் ஹெய்ட்மர், ஜாஸ் பட்லருடன் கூட்டணி சேர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பெங்களூர் அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட இந்த கூட்டணி சீரான இடைவேளையில் ரன்னும் சேர்த்தது. களத்திற்கு வந்த சிம்ரன் ஹெய்ட்மர், ஜாஸ் பட்லருடன் கூட்டணி சேர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பெற்ற அம்மாவை ஏமாற்றி அழைத்து வந்து மகன் செய்த காரியம்! கலங்க வைக்கும் காட்சி

பரபரப்பான ஆட்டம்
பெங்களூர் அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட இந்த கூட்டணி சீரான இடைவேளையில் ரன்னும் சேர்த்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி கேப்டன் டூ பிளஸி 29 (20) விக்கெட்டை சாஹல் எடுத்துக்கொடுத்தார்.
அனுஜ் ராவத் 26 (25) சைனியிடம் ஆட்டமிழந்த நிலையில், கோலியை 5 (6) சஹல் ரன் அவுட் ஆக்கி அசத்தினார். பின்னர் யாரும் நிலைத்து நிற்காமல் இருந்த நிலையில், ஷாபஸ் அகமது, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சரவெடி அணியை நெருக்கடியில் இருந்து விடுத்துவித்தது.

தினேஷ் கார்த்தியின் சரவெடி
இருவரும் அபாரமாக விளையாடியதால் ஆர்சிபி அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. அந்த சமயத்தில் ஷாபஸ் அகமது 45 (26) ஆட்டமிழந்தார். தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்த நிலையில் 12 பந்துகளில் 15 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை உருவானது.
அப்போது பிரசித் கிருஷ்ணா ஓவரில் தினேஷ் கார்த்திக் இரண்டு பவுண்டரிகள் அடித்ததால், 12 ரன்கள் வரை சென்றதது.
ஜெய்ஷ்வால் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹர்ஷல் சிக்ஸர் அடித்ததால், ஆர்சிபி அணி 19.1 ஓவர்கள் முடிவில் 173/6 ரன்கள் சேர்த்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை பெற்றது.
What a sensational win! ? ?
— IndianPremierLeague (@IPL) April 5, 2022
Second victory on the bounce & 2⃣ more points in the bag for @RCBTweets as they beat #RR by 4⃣ wickets. ? ?
Scorecard ▶️ https://t.co/mANeRaZc3i #TATAIPL | #RRvRCB pic.twitter.com/VJMRJ1fhtP