ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு நிறைவேறுமா? பரபரப்பான மும்பை டெல்லி ஆட்டம்!
ஐபிஎல் தொடரின் நேற்றைக்கான போட்டில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.
இதில், வழக்கம்போல சென்னை அணி ராஜஸ்தானிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
சிறப்பாக விளையாடி ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார் அந்த போட்டியில், அஸ்வின் 1விக்கெட் மற்றும் 40* ரன்களை அடித்து களத்தில் இருந்தார்.
சென்னை அணியின் தோல்வியை வெறித்தனமாகவும் கொண்டாடினார். இதனால் ராஜஸ்தான் அணி எளிமையாக ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்திற்கு சென்றது.
மேலும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 10 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
புள்ளிப்பட்டியலில் மாற்றம்
லக்னோ அணி ரன்ரேட் அடிப்படையில் 3வது இடத்திற்கு சென்றுள்ளது. இதனிடையே, நான்காவது இடத்திற்கு பெங்களூர் மற்றும் டெல்லி அணி இடையே கடும் போட்டி நிலவி உள்ளது.
ஆர்சிபி அணி 14 போட்டிகளில் 16 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்தாலும், இன்று நடைபெறும் மும்பை மற்றும் டெல்லி அணிக்கு இடையேயான போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூர் அணி ப்ளே ஆஃப்பிற்கு செல்ல முடியும்.
ஆனால், டெல்லி அணி வென்றுவிட்டால், ரன் ரேட் அடிப்படையில் முன்னேறி ப்ளே ஆஃப் சென்றுவிடும். இதனால், இன்றைக்கான ஆட்டம் பரபரப்பாக சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மும்பை அணியை விட டெல்லி பலம் வாய்ந்திருந்தாலும், அந்த அணியின் நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷை ஆரம்பத்தில் வீழ்த்தி விட்டாலே கிட்டத்தட்ட ரன்கள் கட்டுக்குள் வந்துவிடும்.
இதனால், மும்பை அணி ஆரம்பத்தில் பும்ராவை வைத்து விக்கெட்டுகளை வீழ்த்த போராடும் என தெரிகிறது.
அம்பயரின் தவறான முடிவு! அவுட் ஆன கோபத்தில் பேட்டை உடைத்த வீரர்! வைரல் வீடியோ
கனவு நிறைவேறுமா?
மும்பை அணி வெற்றி பெற வேண்டும் ஒட்டுமொத்த ஆர்சிபி அணியும், மும்பை அணிக்கு பக்கபலமாக உள்ளது.
ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் துடிக்கும் ஆர்சிபியின் கனவை மும்பை நனவாக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ப்ளே ஆஃப்
ப்ளே ஆஃப் போட்டிகள் வரும் மே 24ம் தேதியன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
முதல் எலிமினேட்டர் போட்டி 25ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 27ம் தேதியன்று 2வது எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது.
இறுதிப்போட்டி மே 29ம் தேதி நடைபெறவுள்ளது.