7 ஆண்டுகளாக இந்திய அணியில் தடை செய்யப்பட்ட வீரர் - ஐபிஎல்லில் இடம்பெற்றதால் மகிழ்ச்சி!
ஐபிஎல் 2022-ம் ஆண்டுக்கான போட்டி வருகிற பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டு ஐபிஎல் தொடரில் விளையாட காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், சூதாட்ட பிரச்சினை காரணமாக தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் மீண்டும் ஐபிஎல்லில் விளையாட காத்திருக்கிறார். இவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கிய அவர் ஏழு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, தன் மீது இருந்த குற்றச்சாட்டுக்கு மேல் முறையீடு செய்து வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் தற்போது 38 வயதில் மீண்டும் ஐபிஎல் ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
தற்போது 38 வயதில் மீண்டும் ஐபிஎல் ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார். மேலும், தற்போது 590 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
அவரது குறைந்தபட்ச அடிப்படை விலையாக 50 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஸ்ரீசாந்த் ட்விட்டர் பக்கத்தில், “நான் எல்லோரையும் நேசிக்கிறேன்.
உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றியுடன் இருப்பேன். தயவுசெய்து இறுதி நேரத்தில் எனக்காக பிரார்த்தியுங்கள். ஓம் நமசிவாய என்று பதிவிட்டுள்ளார்.
Love u all..can’t thank u all enough..lots of gratitude ❤️❤️❤️❤️❤️Thnks a lot..#grateful and alwys will be grateful to each and every try one of u..plss do keep me in ur prayers for final auction too..”om Nama Shivaya..” pic.twitter.com/XAyBGx9IVU
— Sreesanth (@sreesanth36) February 1, 2022