சென்னை அணியின் முதல் வெற்றி - கொண்டாடும் ரசிகர்கள்
ஐபிஎல் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி, தொடக்க வீரராக ருதுராஜும், உத்தப்பாவும் களமிறங்கினார்கள்.
ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய இவர்கள்., ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 3 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.
வான வேடிக்கை காட்டிய துபே உத்தப்பா
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த உத்தப்பா , ஷிவம் துபேவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பெங்களூர் அணியின் பவுலர்களை நான்கா புறமும் சிக்ஸர் போர் என இருவரும் விளாச உத்தப்பா 50 பந்துகளில் 4 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 88 ரன்கள் அடித்து அவுட்டானார்.
மறுபுறம் ஷிவம் துபேவும் 46 பந்துகளில் 5 பவுண்டர்கள், 8 சிக்சர்களுடன் 95 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது.
கடின இலக்கு
இதையடுத்து 217 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி பெங்களூரூ அணி களம் இறங்கியது. ஆரம்பத்தில், ப் டூ பிளஸ்சிஸ் மற்றும் அனுஜ் ராவத் ஆரம்பத்தில் தடுமாறினர். பின்னர், மூன்றாவது ஓவரிலேயே 8 ரன்கள் எடுத்திருந்த டூ பிளஸ்சிஸ் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஜோர்டனிடம் கேட்ச் ஆகினார்.

பின்னர் வந்த விராட் கோலியும், ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவரை முகேஷ் சவுத்ரி அவுட் ஆக்கி வெளியேற்றினார். தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, சபாஷ் அஹமத் 41 ரன்களிலும், பிரபுதேசாய் 34 ரன்களும் சேர்த்திருந்தனர்.
13வது ஓவரில் இருந்து 15 ஓவர் வரை மைதானத்தில் விக்கெட் மழை பொழிந்தது. ஏனென்றால், இவர்களுக்கு பிறகு வந்த ஹஸரங்கா மற்றும் ஆகாஷ் தீப் இருவரையும் அடுத்த பந்துகளில் ஜடேஜா டக் அவுட் செய்தார்.
வாஸ்து சாஸ்திரப்படி இந்த செடிகளை வீட்டில் வைத்தால் போதும்.. வீட்டில் பணமழை கொட்டுமாம்!
தினேஷ் கார்த்தியின் விடா முயற்ச்சி
இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் சென்னை அணியின் பவுலர்களை பவுண்டரி சிக்ஸர்களாக விளாசி நம்பிக்கை கொடுத்தார்.
ஒரு கட்டத்தில், 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த வெற்றி என்ற நிலையில், ப்ரோவோவின் ஓவரில் சிக்ஸர் அடிக்க முற்பட்ட தினேஷ் கார்த்திக், லாங்கில் கேட்ச் அவுட் ஆனார்.

முதல் வெற்றி
இதனால், சிஎஸ்கேவின் வெற்றி உறுதியானது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி.
சென்னை அணி தரப்பில் மஹீஸ் தீக்சனா 4 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், பிராவோ, முகேஷ் சவுத்ரி தலா ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
மேலும், இந்த சீசனில் சென்னை அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.