IPL2022; இந்தியாவில் இந்த 2 நகரத்தில் நடக்குமாம்.. அதிக விலைக்கு போகும் சிஎஸ்கே வீரர் இவரா?
ஐபிஎல் 2022-ம் தொடரை நடத்த பிசிசிஐ தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த வருடம் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் இந்த சீசனுக்கான ஏலம் சிறிய அளவில் அல்லாமல் மெகா அளவில் 2 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த மெகா ஏலமானது, ப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. 1214 வீரர்களை தங்கள் அணிகளில் எடுக்க 10 அணிகளும் போட்டி போட உள்ளன.
இதெல்லாம் ஒரு பக்கம் சென்றாலும் கொரோனா காரணமாக இந்தியாவில் ஐபிஎல் நடைபெறுமா என கேள்விகள் எழுந்துகொண்டு இருக்கின்றன.
இந்நிலையில், வெளிநாடுகளில் நடத்தினால் வரி செலவுகள் அதிகமாகும் என்பதால் இந்தியாவிலே நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஐபிஎல் தொடரை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம்.
இந்த முறை 25% ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை நேரடியாக காண மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போகும் பவுலரை யார் என்ற கேள்விக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தீபக் சாஹர் அதிக விலைக்கு ஏலம் போவார் எனக்கூறியுள்ளார்.
ஏனென்றால், தீபக் சாகர் புதிய பந்தில் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனுடையவர். மேலும், தீபக் சாஹரால் முதல் 3 ஓவர்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் அதோடு பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தால் நிச்சயம் அணிக்கும் பக்க பலமாக இருக்கும் இதனால் சிஎஸ்கே மீண்டும் எடுக்க அதிக வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.