சிஎஸ்கேவின் ஓப்பனராக இவர் வேண்டும்.. தோனி போட்ட மாஸ்டர் ப்ளான் என்ன?
ஐபிஎல் 2022-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 13, 14 நாட்களில் பெங்களூரில் நடைப்பெறுகிறது. 2018-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக நடத்தப்படும் இந்த மெகா ஏலத்தில் 590 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நல்ல ஓப்பனிங்கை இந்த ஆண்டு தேடி வருகிறது.
அதன்படி கடந்த சீசனில் ருதுராஜ் கெயிக்வாட் - டூப்ளசிஸ் ஆகியோர் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்திருந்தனர்.
ஆனால், டூப்ளசிஸ் அந்த அணி கழட்டிவிட்டதால், அவரின் இடத்திற்கு வேறு வீரரை ஏலம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனால், சென்னை அணி எப்பொழுதும் தோனியின் பரிந்துரையை கேட்கையில், இந்திய வீரர் ஷிகர் தவானை ஏலம் எடுக்க கேட்டுள்ளார்.
அவருக்காக அதிக தொகையையும் செலவு செய்யலாம் எனக்கூறியுள்ளாராம். டெல்லி அணிக்காக நிலையான ஆட்டத்தையும், எதிரணியை கலங்கடிப்பதும் மற்ற அணிகள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
மேலும், ஒவ்வொரு அணியும் பேட்டிங்கில் இடது கை, வலது கை ஜோடியை அதிகளவில் விரும்பும்.
அந்த வகையில், தவான் ஒரு இடதுக்கை வீரர் என்பதால் ருதுராஜுடன் சேர்ந்து ஓப்பனிங்கில் நல்ல அடித்தளம் அமைக்க முடியும் என எதிர்ப்பார்கின்றனர்.