ஐபிஎல் சூப்பரான அறிவிப்பு.. புதிய அணிக்கு அடித்த ஜாக்பாட்! ஒரு அணிக்கு எத்தனை பேரை தக்கவைக்கலாம்..
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை வென்றிருந்தது. இதன்பின்னர் அடுத்தாண்டுக்கான ஐபிஎலில் புதிதாக இரண்டு அணிகள் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதன்படியே இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், அகமதாபாத் மற்றும் லக்னோ என இரண்டு நகரங்களின் அணியை வாங்கியுள்ளனர்.
மேலும், லக்னோ அணியை சஞ்சிவ் கோயங்காவின் ஆர்பிஎஸ்ஜி குரூப் ரூ. 7090 கோடிக்கும், அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் ரூ. 5600 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளது.
இந்த நிலையில், புதிய அணிகளின் வருகையால் மற்ற அணிகள் உட்பட ஒரு அணிக்கு எத்தனை பேரை தக்க வைக்க முடியும் என்ற குழப்பம் நீடித்து வந்தது. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதில், ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியுமாம். அதிலும், இரண்டு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 3 இந்திய வீரர்கள் 1 வெளிநாட்டு வீரர்களும், அப்படி இல்லையெனில், இரண்டு இந்திய வீரர்களும் 2 அயல் நாட்டு வீரர்களும் தக்க வைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, புதிதாக வந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கும் புதிய வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில், ஏற்கனவே தக்க வைக்கப்பட்டுள்ள மற்ற 8 அணிகள் 4 வீரர்களை தாண்டி, மீதமுள்ள 3 வீரர்களை புதிய அணி ஏலத்திற்கு முன்பே தக்க வைத்துக்கொள்ளலாம் என ஒரு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
சரியாக சொல்லவேண்டும் என்றால் புதிய அணி ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாமாம். இதில், 2 இந்திய வீரர் ஒரு அயல்நாட்டு வீரர்களும் அடங்கும்.
மேலும், புதிய அணிகளின் வரவால், போட்டியில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதில், 10 அணிகளையும் தலா 5 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 5 அணிகளும் தங்களுக்குள் 2 முறை மோதிக்கொள்வார்கள்.
இதன்பின் இறுதியில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் செல்லும். இதனால் மொத்தமாக 74 போட்டிகள் நடைபெறும். விரைவில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கான தேதி அறிவிக்கப்படும் எனத்தெரிகிறது.