இந்த சீசனிலேயே விராட் கோலியின் கேப்டன் பதவியை பறிக்கிறதா ஆர்சிபி.... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்;
இந்திய அணியின் கேப்டனும், ஆர்சிபி ஐபிஎல் அணியின் கேப்டனாக திகழும் விராட் கோலி கடந்த சில நாட்களாகவே பேட்டிங்கில் திணறி வருவதாலும், மன அழுத்தம் காரணமாகவும் டி20 மற்றும் ஆர்சிபியில் இருந்து கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து, கடந்த மேட்சில் கொல்கத்தா அணியுடன் மோதிய ஆர்சிபி அணி மிகவும் மோசமாக விளையாடி 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விராட் கோலியும், 5 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகியிருந்தார்.
கோலியின் உடல்மொழியிலும் தொய்வு ஏற்பட்டதைக் கவனிக்க முடிந்தது. அதாவது கேப்டன்சியிலிருந்து விலகப்போகிறவர் ஒருவரின் உடல்மொழியாகவே இருந்தது. கவுதம் கம்பீரும் தொடர் முடிந்தவுடன் அறிவித்திருக்க வேண்டும் முதலிலேயே அறிவித்து விட்டால் அணியின் ஒருமை குலையும் என்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்த முன்னாள் வீரர் ஒருவர், கோலி பாதியிலேயே கேப்டன்சியிலிருந்து இறக்கப்படுவார் எனக்கூறியுள்ளார். இது ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு புதிதல்ல, தினேஷ் கார்த்திக் பாதியிலேயே நீக்கப்பட்டார், வார்னர் அப்படித்தான் நீக்கப்பட்டார்.
ஒன்று அவர்கள் நீக்கப்பட்டார்கள் அல்லது பாதியில் அவர்களாகவே கேப்டன்சியை துறக்க வைக்கப்பட்டனர். இது ஆர்சிபியிலும் நிகழலாம். கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த போட்டியை பார்த்த போது எனக்கு இதுதான் தோன்றியது.
இன்னும் ஒரு போட்டி இப்படி தோல்வியடைந்தால் ஆர்சிபி கேப்டன்சியில் உடனேயே மாறுதல் வருவது நிச்சயம் என கூறி இருக்கிறார். மேலும், டேனியல் வெட்டோரி போன பிறகு கோலி 2013 தொடரில் ஆர்சிபி கேப்டன் ஆனார், ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை.
132 போட்டிகளில் ஆர்சிபி 62- ல் தான் கோலி கேப்டன்சியில் வென்றுள்ளது. 66 போட்டிகளை தோற்றுள்ளார். இவருக்குப் பதில் ஏ.பி.டிவில்லியர்ஸ் அல்லது யஜுவேந்திர செகல் பெயரும் அடிபடுகிறது.
பந்த், சஞ்சு சாம்சனைத் தொடர்ந்து இளமையின் பாதையில் தேவ்தத் படிக்கல் பெயரும் அடிப்பட்டு வருகிறது. எப்படியும், ஆர்சிபி அணியில் நிலையான கேப்டனை தேட இணி நிர்வாகம் திணறுவதில் சந்தேகமில்லை.