உண்டியலில் விழுந்த ஐபோன்... சினிமா பாணியில் நடந்த சம்பவம்! பரிதவித்து நிற்கும் பக்தர்
உண்டியலில் தவறி விழுந்த ஐபோன் கோவிலுக்கே சொந்தம் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்டியலில் விழுந்த ஐபோன்
தமிழ் சினிவாவில் வெளியான அம்மன் என்ற திரைப்படத்தில், உண்டியலில் தவறி விழுந்துவிட்டால் அந்த பொருள் அம்மனுக்கே சொந்தம் என்ற காட்சிகள் உள்ளது.
இதில் குழந்தை ஒன்று காணிக்கை செலுத்தும் போது உண்டியலில் தவறிவிழுந்துவிட்ட நிலையில், அது கோவிலுக்கே சொந்தம் என்று வைத்துக் கொள்வார்கள்.
தற்போது சினிமா பாணியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் திருப்போருரில் உள்ள முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
அப்பொழுது தவறுதலாக ஐபோன் ஒன்று உண்டியலில் விழுந்துள்ளது. உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்த போது, உண்டியலுக்குள் விழுந்த பொருளை தற்போது எடுக்க இயலாது என்று கூறியுள்ளனர்.
தற்போது உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணிகள் தொடங்கிய நிலையில் பக்தர் தவறிவிட்ட ஐபோனும் அதில் இருந்துள்ளது.
அவருக்கு போன் செய்து அழைத்த நிர்வாகத்தினர், ஐபோனில் உள்ள தரவுகளை நேரில் வந்து வேறொரு போனுக்கு மாற்றிக் கொள்ளுமாறும், குறித்த ஐபோனை உங்களிடம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
இதனால் குறித்த பக்தர் பெரும் அதிருப்தியில் காணப்படுகின்றனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |