வெறும் ரூ.27,000க்கு ஐபோன் வாங்க முடியுமா? நம்ப முடியாத தள்ளுபடி இதோ
ஐபோன் நிறுவனமான ஆப்பிள் iPhone16ஐ நம்பமுடியாத தள்ளுபடி விற்பனையை வழங்கிவருகின்றது.
ஆப்பிள் iPhone 16
ஆப்பிள் iPhone16 கடந்த செப்டம் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னணி இ-காமர்ஸ் தளமான Flipkart-ல் இதற்கு அதிரடி தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது.
ஆப்பிள் ஐபோன் 16, 128 GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 79,900 ஆகும். ஆனால் தற்போது 6% தள்ளுபடியுடன் ரூ. 74,990-க்கு கிடைக்கிறது.
கூடுதலாக, Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ. 2500 தள்ளுபடி கிடைக்கும். பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ. 49,950 வரை தள்ளுபடி பெறலாம்.
இதுவே ICICI வங்கி கிரெடிட் கார்டு மூலம் ரூ.4,000 உடனடி தள்ளுபடி பெறலாம். அனைத்து சலுகைகளுடன், இந்த போனை சுமார் ரூ. 27,000-க்கு பெறலாம்.
சிறப்பம்சங்கள் என்ன?
6.1 இன்ச் XDR டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ள இந்த போனின் கேமரா, 48MP + 12MP டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12MP முன் கேமரா உள்ளது. இந்த போன் A18 சிப், 6 கோர் செயலியுடன் இயங்குகிறது.
இந்த போனில் உள்ளமைக்கப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போன் திரை 2556 x 1179 பிக்சல் ரெசல்யூஷனை ஆதரிக்கிறது.
இந்த போன் OLED திரையைக் கொண்டுள்ளது. 4K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பின்புற கேமரா மூலம் பதிவு செய்யலாம். குறைந்த விலையில் iPhone 16 வாங்க விரும்புவோருக்கு இது சிறந்த டீலாக இருக்கும்.