அதிரடியில் தள்ளுபடியில் ஐஃபோன் 15 மாடல்... பாதி விலைக்கு வாங்க என்ன செய்ய வேண்டும்?
கடந்த செப்டம்பர் மாதம் 12 தேதி ஆப்பிள் ஐபோன் 15 மாடல் வெளியான நிலையில், இதனை தள்ளுபடி விலையால் பாதி பணம் மட்டும் கொடுத்து வாங்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐபோன் 15
ஆப்பிள் ஐஃபோன் 15 பிளஸ் சீரிஸின் ஆரம்ப விலை ரூ.89,900மாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தள்ளுபடியில் ரூ. 46,000க்கு கிடைக்கின்றது
இந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 15 மாடல் கடந்த 12ம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் நவீன டிஸ்பிளே, 48 மெகா பிக்சல் கேமரா, மறுசுழற்சி செய்யக்கூடிய நவீன பேட்டரிகள், கிராபிக்ஸ், மொபைல் கேமிங் ஆகிய வசதியுடன் டைப்-சி சார்ஜிங் போர்ட்டர் வசதியுடன் வெளியாகியுள்ளது.
விலை என்ன?
ஐஃபோன் 15ல் 128 ஜிபி மெமரி கொண்ட போன் ரூ.79.000 ஆகவும், 256 ஜிபி மெமரி கொண்ட போன் ரூ.89.000 ஆகவும், 512 ஜிபி கொண்ட போன் ரூ.1,09,00 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஐஃபோன் 15 பிளஸ் மொடலில் 128 ஜிபி ரூ.89,000 ஆகவும், 256 ஜிபி கொண்ட போன் ரூ.99,000 ஆகவும், 512 ஜிபி ரூ.1,19,900 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐஃபோன் 15 ப்ரோ மொடலில் 128 ஜிபி மெமரி 1,34,900 ஆகவும், 256 ஜிபி ரூ.1,44,900 ஆகவும், 512 ஜிபி ரூ.1,64,900 ஆகவும், 1 டிபி மெமரி ரூ.1,84,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் மொடலில் 256 ஜிபி மெமரி ரூ.1,59,900 ஆகவும், 512 ஜிபி மெமரி ரூ.1,79,900 ஆகவும், 1 டிபி மெமரி ரூ.1,99,900 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஐஃபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 15 பிளஸ் சீரிஸ் போன்களை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் சுமார் 40 ஆயிரம் குறைவாக பெறுவதற்கு தள்ளுபடி வெளியாகியுள்ளது.
தள்ளுபடி விலை என்ன?
தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு ஹெச்டிஎப்சி கார்டுகளை பயன்படுத்தி 15 மொடல்களுக்கு ரூ.5000 தள்ளுபடி பெறலாம். பழைய ஐஃபோன்களை கொடுத்துவிட்டு புதிய மொடலை வாங்கும் போது ரூ.6000 தள்ளுபடி கிடைக்குமாம்.
அதாவது நீங்கள் 13 மொடலை கொடுத்துவிட்டு 15 பிளஸ் மொடலை வாங்கினால், ரூ.37,500 தள்ளுபடி கொடுப்பதுடன், பணம் செலுத்துவதற்கு ஹெச்டிஎப்சி கார்டுகளை பயன்படுத்தினால் இதனுடன் 6000 கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.
மொத்தம் 43 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.46,400க்கு ஐஃபோன் 15 பிளஸ் மொடலை வாங்கி செல்லலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |