இன்று விற்பனையை தொடங்கிய ஐபோன் 15 சீரிஸ்... விலை எவ்வளவு தெரியுமா?
ஐபோன் என்பது பலரது நீண்ட நாள் கனவாக இருக்கும் இந்நிலையில், புதியதாக ஐபோன் 15 சீரிஸ் இன்று வெளியாகியுள்ளது. இவை அதிக விலையாக இருக்கும் என்று யோசிக்கும் வாடிக்கையாளர்கள் எந்த ஐபோனை குறைந்த விலையில் வாங்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஐபோன்
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபோனான 15 சீரிஸ் மொடலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஐபோன் 15 சீரிஸ், குபெர்டினோ-அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனத்தால் கம்ப்யூட்டிங் செயல்முறை மற்றும் புகைப்படம் எடுப்பதில் பெரிய மேம்பாடுகளைக் காணலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய அப்டேட்டாக ஐபோன் 15 சீரிஸ் பார்க்கப்படுகின்றது. ஐபோன் 15 இன் நான்கு பதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது - ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ். இந்த மாடல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐபோன் உற்பத்தி மையத்தில் இந்த போன்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
அதேபோல் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோவை USB-C செயல்பாட்டுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் முதல்முறையாக USB-C சார்ஜ் டைப்புடன் அமலுக்கு வந்துள்ளது.
ஐபோன் 15 சீரிஸின் விலை
128 ஜிபி அடிப்படை சேமிப்பகத்துடன் வெளியாகும் ஐபோன் 15 விலை ₹ 79,900. இதே மெமரியுடன் வெளியாகும் iPhone 15 Plus இன் விலை ₹ 89,900.
iPhone 15 Pro (128 GB) இன் விலை ₹ 1,34,900 இல் தொடங்குகிறது, மேலும் 256GB சேமிப்பகத்துடன் iPhone 15 Pro Max ஐ வாங்க விரும்பினால், ₹1,59,900 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான ஐபோனை வாங்குவதற்கு இளைஞர் ஒருவர் 17 மணிநேரம் காத்திருந்து முதல் ஆளாக வாங்கியுள்ளார். மேலும் ஐபோன் ஷோரூம்களில் நெடு வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருந்து போனை வாங்கிச் சென்றுள்ளனர்.
ஐபோன் 15 அறிமுகம் காரணமாக , iPhone 14 இன் விலை ₹ 69,900 ஆகவும், iPhone 14 Plus இன் விலை ₹ 79,900 ஆகவும் குறைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |