ஆப்பிள் நிகழ்வு 2023: iPhone 15 இன்றிலிருந்து விலையுயர்ந்த போனாக மாறுமா?
இன்றைய காலக்கட்டத்தில் நம்மிடையே அதிக ஆதிக்கம் செலுத்துவது செல்போன்கள் தான். சிறியவர் முதல் பெரியவர் வரை வகை வகையாக செல்போன் பாவனையாளர்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
இருப்பதை பாவிப்பர் ஒருரகம் என்றால் புதிதாக எந்த செல்போன் வந்தாலும் அதை வாங்கியே தீருவேன் என்ற மிதப்பில் சிலர். அப்படி உங்களை ஆடிப்போகவைக்கும் வகையில் வெளியாகவுள்ளது iPhone 15.
iPhone 15
iPhone 15இற்காக காத்திருந்தவர்களுக்காக இன்றைய தினம் போனின் வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. செப்டம்பர் 12 இன்று நடைபெறும் Apple Event 2023, வொண்டர்லஸ்ட் வருடாந்த நிகழ்வில் iPhone 15 பற்றி அறிவிக்க உள்ளது.
இவற்றில் வழக்கம் போல ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு புதிய ஐபோன் மாடல்கள் வெளியாக உள்ளன. இந்த ப்ரோ மாடல்கள் கடந் ஆண்டை விட இந்த ஆண்டு விலைகளில் அதிக மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பட்ஜெட்டில் போன் வாங்க காத்திருந்தவர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாகவே இருக்கும். அந்தவகையில், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவை கடந்த ஆண்டைப் போல முறையே $799 மற்றும் $899 ஆரம்ப விலையில் விற்ப்பட்டாலும், ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை சுமார் $100 முதல் $200 வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மாற்றங்கள்
ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் இந்த முறை டைட்டானியம் சட்டத்துடன் வரும் என்று ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் தெரிவித்துள்ளார். மாடல்களின் பக்கங்களும் சேஸிகளும் டைட்டானியத்தால் செய்யப்பட்டிருக்கும், அவை இலகுவாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
ப்ரோ மாடல்கள் டைட்டானியம் பாடி காரணமாக முன்னோடிகளை விட 10 சதவீதம் இலகுவாக இருக்கும். கைபேசிகள் A17 சிப் மற்றும் அதிக ரேம் உடன் வரும் என்றும் இது பேட்டரி ஆயுளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 23 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கிய முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது, இந்த மாடல்கள் கூடுதல் மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |