ஐபோன் 13 போனை வெறும் ரூ.3,295 வாங்க முடியுமா? - செம்ம ஆஃபர்
ஐபோன் என்றால பலருக்கும் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பலருக்கு இது கனவாகவே போய்விடும்.
ஆனால், ஆப்பிள் நிறுவனம் பலா சலுகைகளை வழங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களை வெளியிடவுள்ளது.
iPhone 14 ஸ்மார்ட்போன்களில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி புதிய ஆப்பிள் ஐபோன் 14 செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஐபோன் 13 ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.
சலுகைகள்
அமேசான் இந்தியா ஷாப்பிங் தளத்தில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை மிகக்குறைந்த விலையில் உங்களால் வாங்க முடியும்.
அதாவது. 4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட ஐபோன் 13 விலை ரூ.79,900 ஆக அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
நேரடியாக கிடைக்கும் ரூ.10,000 சலுகையை கழித்தால், போனின் விலை 69,990 ஆக இருக்கும். இவ்வளவு தானா என்றெல்லாம் எண்ண வேண்டாம்.
ஐசிஐசிஐ வங்கி அமேசான் பே கிரெடிட் கார்டு வைத்திருந்தால் கூடுதல் சலுகைகள் வழங்கப்படும். இதுமட்டுமின்றி நன்றாக இருக்கும் போன்களுக்கு ரூ.23,000 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பு கிடைக்கிறது.
அமேசானின் இந்த அதிரடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் பயன்படுத்தினால் சுமார் ரூ.45,000 என்ற விலையில் புதிய ஐபோன் 13 ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
மேலும், சுலப தவணை திட்டமாக கடன் அட்டைகள் உதவியுடன் போனை வெறும் ரூ.3,295 செலுத்தி நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
iPhone 13 Specifications
ஐபோன் 13 ஸ்மார்ட்போனில் 6.1" இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே 2532x1170 பிக்சல் ரெசலியூஷனில் கொடுக்கப்பட்டுள்ளது.
செராமிக் கொண்டு டிஸ்ப்ளே பாதுகாக்கப்பட்டுள்ளது. iOS 13 இயங்குதளம் இதில் நிறுவப்பட்டுள்ளது.
