வழிபாடு நேரங்களில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க! ஆபத்துகள் ஏற்படும் உஷார்
பொதுவாக இந்து மக்களுக்கு இறை வழிபாடு குறித்து பல நிபந்தனைகள் இருக்கிறது.
அதனை தவறும் பட்சத்தில் அது தெய்வ குத்தம் என்று கூறுவார்கள். வீட்டில் எவ்வளவு செல்வம் செழிப்பு இருந்தாலும் ஆன்மீகம் என்பது ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்து மதத்திலுள்ளவர்கள் நாம் பின்பற்ற வேண்டிய சில நிபந்தனை என்பது குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்
1. மகாலட்சுமி நின்ற நிலையில் இருக்கும் படம் தான் வீட்டில் வைத்திருக்க வேண்டும். மகாலட்சுமி அமர்ந்திருக்கும் நிலையிலுள்ள படம் நமக்கு நன்மையை தராது மற்றும் நல்ல பலன்கள் கிடைக்க தாமதம் ஏற்படும்.
2. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும் அல்லது திரையிட்டிருக்கும் போதும் வழிபாடுகள் மேற்க்கொள்ள கூடாது.
3. பெண்கள் நெற்றிக்கு குங்குமம் இடும் போது வலது கை மோதிர விரலை தான் பயன்படுத்தப்படல் வேண்டும்.
4. விக்கிரகத்திற்கு தீபாராதனை காட்டி வழிபாடுகள் நடக்கும் போது கண்களை மூடி பிராத்தனை செய்யக்கூடாது.
5. பெண்கள் மாதவிடாய் காலத்தில் தலைக்கு பூ வைக்கக் கூடாது. 6. வீடுகளில் சனி பகவானை வழிபடும் போது எள் விளக்கு வைக்கக்கூடாது.
7. எலுமிச்சைப்பழத்தை பயன்படுத்தி விளக்கு வைக்கக்கூடாது.
8. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோயில்களுக்கு சென்று திரும்பும் போது கட்டாயமாக வீட்டிற்கு தான் வர வேண்டும்.
9. கோயிலில் அர்ச்சனை செய்யும் பிரசாதங்களை இடது கையால் வாங்க கூடாது.
10. கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் போது அவர் விட்டிலிருந்து யாரும் சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.