டிடி-க்கு காலில் விழுந்த அடி! அக்கா பிரியதர்ஷினி கொடுத்த பேட்டி
டிடி எனும் திவ்யதர்சினிக்கு காலில் ஏற்பட்ட அடி குறித்து அவரின் அக்கா பிரியதர்சினி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
பிரியதர்சினி
டிடி-யின் அக்கா பிரியதர்சினி அவரின் தங்கைக்கு காலில் விழுந்த அடியால் ரசிகர்கள் வைக்கும் விமர்சனங்களுக்கு பேட்டி மூலம் பதில் அளித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறும் போது 'டிடிக்கு காலில் பிரச்சனையை பற்றி அனைவரும் எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுவார்கள். சிலர் நேர்மறையான கருத்துக்களையும் வெளியிடுவார்கள். இதற்கெல்லாம் நாங்கள் அவர்களுக்கு பதில் அனுப்ப தேவை இல்லை.
டிடிக்கு காலில் அடிபட்டு இருந்தாலும் அவள் இன்னும் அவளது வேலையை செய்து கொண்டு தான் இருக்கிறாள். இது மிகவும் பெரிய விஷயம்.
எங்கள் குடும்பத்தில் வேறு யாருக்காவது இப்படி நடந்திருந்தால் டிடியை போல இருந்திருக்க மாட்டார்கள்.
அவள் தன்னுடைய துன்பத்திலிருந்து மீண்டு எழுந்துவிட்டாள் என அர்த்தம் இல்லை. அவளுக்கு பிரச்சனை எவ்வளவு இருந்தாலும் அதை அவள் எப்படி கையாளுகிறாள் என்பது தான் முக்கியம்.
ஒரு விஷயத்தை நாம் பார்க்கும் விதம் நன்றாக இருக்க வேண்டும். அது நம் கைகளில் தான் உள்ளது. இது டிடியின் விஷயத்தில் தெரிகிறது.
மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். அது மிக மிக சந்தோஷமான விஷயம் மட்டுமல்ல மரியாதைக்குரிய விஷயமும் தான்.' என பேட்டியில் கூறியிருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |