International Yoga Day: யோகா பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்
தற்போது பிரபலமாக இருக்கும் யோகா என்பது உடல் நிலைகள், மூச்சுக் கட்டுப்பாடு, தியானம் மற்றும் தளர்வு நுட்பங்கள் என்பவற்றை உள்ளிடக்கிய ஒரு பயிற்சியாகும்.
இதனை பண்டைய காலம் முதல் இந்தியர்கள் செய்து வருகின்றனர். இதன் தோற்றம் இந்தியாவாக பார்க்கப்படுகின்றது.
பல கலைகளுக்கு பெயர் பெற்ற இந்தியாவில் யோகா என்பது அனைவராலும் செய்யக் கூடிய பயிற்சியாக உள்ளது.
இந்த பயிற்சியை உடலுக்கும் மனதிற்கும் அமைதி கொடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என அனுமானங்கள் கூறுகின்றன.
யோகா பயிற்சியை உடல் ரீதியாக பார்க்கும் போது தசைகளை நீட்டி ஆசனங்கள் செய்வதால் உடலை வலுப்படுத்தும் அத்துடன் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் சமநிலை என்பவற்றையும் மேம்படுத்த உதவும்.
உடல் எடையை சீராக பேண நினைப்பவர்கள் யோகாசனங்களை தொடர்ந்து செய்யலாம். ஏனெனின் இந்த பயிற்சியில் ரத்த ஓட்டம் மூட்டு இணைப்புகள் வரை சென்று ஆரோக்கியமாக உடலை வைத்து கொள்ளும்.
முதலில் நாம் யோகாவில் இருக்கும் ஆசனங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
அதன்படி,
பத்மாசனம் | வீராசனம் | யோகமுத்ரா | உத்தீதபத்மாசனம் | சானுசீரானம் |
பஸ்திமோத்தாசனம் | உத்தானபாத ஆசனம் | நவாசனம் | விபரீதகரணி | சர்வாங்காசனம் |
ஹலாசனம் | மச்சாசனம் | சப்தவசீராசனம் | புசங்காசனம் | சலபாசனம் |
தனுராசனம் | வச்சிராசனம் | மயூராசனம் | உசர்ட்டாசனம் | மகாமுத்ரா |
அர்த்தமத்த்ச்யோந்தராசனம் | சிரசாசனம் | சவாசனம் | மயூராசனம் | உசர்ட்டாசனம் |
அர்த்த மத்ச்யோந்திராசனம் | அர்த்த சிரசானம் | சிரசாசனம் | நின்ற பாத ஆசனம் | பாதாசுத்தானம் |
திருகோணசனம் | கோணாசனம் | உட்டியானா | நெளலி | சக்கராசனம் சவாசனம்/சாந்தியாசனம் |
பவனமுத்தாசனம் | ஊர்த்துவ பதமாசனம் | பிரானாசனம் | சம்பூரண சபீடாசனம் | சதுரகோனோசனம் |
கந்தபீடாசனம் | கோரசா ஆசனம் | மிருகாசனம் | சர்வாங்காசனம் | நடராசா ஆசனம் |
ஆகர்சன தனூராசனம் | ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம் | உருக்காசனம் | ஏக அத்த புசங்காசனம் | யோகா நித்திரை |
சாக்கோராசனம் | அர்த்தபாத பச்சி மோத்தாசனாம் | பூர்ண நவாசனம் | ஏகபாத சிரசாசனம் | பிறையாசனம் |
கலா பைரப ஆசனம் | கவையாசனம் | முக்த அகத்த சிரசாசனம் | துரோணாசனம் |
இவ்வளவு பலன்களை அள்ளிக் கொடுக்கும் யோகா பற்றிய பல கட்டுக்கதைகள் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இதனை பொய்யென நிரூபிக்கும் வகையில் யோகா மற்றும் ஆரோக்கிய பயிற்சியாளர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. கட்டுக்கதை
உடலை வளைத்து நெளிக்கக் கூடியவர்கள் மட்டுமே யோகா செய்ய முடியும்.
உண்மை
யோகா பயிற்சிகளை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். உடலை வளைக்கும் நபர்கள் மாத்திரம் செய்யலாம் என்பது முற்றிலும் கட்டுக்கதை. யோகா செய்வது தொடர்பில் முன்னேற்றம் தான் முக்கியமே தவிர உடலமைப்பு பற்றிய எந்த கவலையும் வேண்டாம்.
2. கட்டுக்கதை
யோகா பெண்கள் செய்யும் பயிற்சியாகும்.
உண்மை
வரலாற்று ரீதியாக பெண்கள் தான் அதிகமாக யோகா செய்கிறார்கள். ஆனால் இது பெண்களுக்கான பயிற்சி என்பது பொய்யான கருத்து. ஆண்கள் யோகா செய்யும் பொழுது அவர்களின் உடல் வலிமையாகவும் நெகிழ்வுத்தன்மையாகவும் மாறும். அத்துடன் மன அழுத்தம் குறையும்.
3. கட்டுக்கதை
யோகா செய்பவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும்.
உண்மை
யோகா செய்வதற்கு வயது எல்லை அவசியம் இல்லை. குழந்தைகள், முதியோர்கள், இளம் வயதினர்கள் என அனைவரும் செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |