Interesting Fact: உலகத்திலேயே ஒரு எறும்பு கூட இல்லாத இடம் எது தெரியுமா?
நம்ம வீடு, தெரு, தோட்டம்னு எல்லா இடத்துலயும் எறும்பைப் பார்க்கிறோம். ஆனா, இந்த உலகத்துல ஒரு இடத்துல மட்டும் ஒரு எறும்புகூட கிடையாதாம். அது எந்த இடம், ஏன் அங்க எறும்புகள் இல்லைனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
நம் வீடு, சமையலறை, தோட்டம் என அனைத்து பக்கத்திலும் எறும்புகளை பார்த்திருப்போம். ஆனால் உலகிலேயே ஒரு எறும்பு கூட இல்லாத இடம் பற்றி தெரியுமா? அது அண்டார்டிகா தான். அண்டார்டிகா, பனியால் மூடப்பட்ட ஒரு கண்டம். இது உலகின் ஐந்தாவது பெரிய கண்டம்னாலும், மற்ற கண்டங்களை விட இங்க சூழல் ரொம்பவே வித்தியாசமானது. வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழே போவதால், எறும்புகள் போன்ற பூச்சிகள் உயிர் வாழ்வது ரொம்பவே கடினம்.

எறும்புகள் வாழ சூழல் ஏதுவாக இல்லை
எறும்புகள் உயிர் வாழ ஒரு குறிப்பிட்ட சூழல் தேவை. அவை நிலத்துக்கு அடியில், பாறைகளுக்கு கீழ், மரப்பட்டைகளுக்குள்ள வாழும் உயிரனமாகும். ஆனால், அண்டார்டிகாவின் பனி, உறைந்த நிலம், கடுமையான காற்று காரணமாக எறும்புகளுக்குத் தேவையான சூழல் அண்டார்டிகாவில் இல்லை.
வெப்பத்தைத் தக்கவைக்க இயலாமை
விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்கன்னா, எறும்புகள் உருவத்துல ரொம்ப சின்னதா இருக்கறதால, அதோட உடல்ல வெப்பத்தை தக்கவைக்க முடியாது. கடுமையான குளிரில் அவற்றின் இயக்கம் குறைஞ்சிடும். இதனால உணவு தேடவோ, கூடு கட்டவோ முடியாது. அதனாலதான் அண்டார்டிகா எறும்புகளுக்கு ஏற்ற இடமில்லை.

எந்தவொரு உயிரினமும் உயிர் வாழ்வதற்கு இவை அவசியமானவை
பூமியில் ஒவ்வொரு உயிரினமும் வாழ அதுக்குனு ஒரு தனிப்பட்ட சூழல் தேவை. ஒரு இடத்துல சுலபமா வாழுற ஒரு உயிரினம், இன்னொரு இடத்துல வாழ முடியாம போகலாம். காலநிலை, வெப்பநிலை, உணவு கிடைப்பது போன்ற விஷயங்கள் உயிரினங்களின் வாழ்க்கையை பாதிக்குது.
கூடு கட்ட முடியாத சூழல்
எறும்புகள் பொதுவாகப் பூமிக்கு அடியில் கூடு கட்டும். ஆனால், அண்டார்டிகாவின் தரைப்பகுதி உறைந்து போவதால் (Frost heaving), எறும்புகளால் அங்கு இனப்பெருக்கம் செய்யவோ, நீண்ட காலம் உயிர்வாழவோ முடிவதில்லை.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |