சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி நல்லதா? பக்கவிளைவுகளை தெரிந்து கொள்வோம்
இன்றைய உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
வயது வித்தியாசமின்றி அனைவராலும் தாக்கப்படும் நோய்களில் மிக முக்கியமானதாகிவிட்டது சர்க்கரை நோய்.
இதற்கு மாத்திரைகள், மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் இன்சுலின் ஊசியை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.
ஆனால் இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது பல பக்கவிளைவுகள் உண்டாகக்கூடும்.
இன்சுலின் ஊசி பயன்படுத்தும் முன்
இன்சுலின் ஊசி பயன்படுத்தும் முன் ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம், அதாவது ரத்த குளுக்கோஸ் மற்றும் ஹீமோகுளோபின் A1C யை தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பாக எந்த வகையான இன்சுலின் ஊசியை பயன்படுத்துகிறீர்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும், அளவுக்கு மீறினால் என்ன நடக்கும் என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் மருந்தை பாதுகாப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளுங்கள், சூடான மற்றும் அதீத குளிரில் இன்சுலினை வைத்திருந்தால் என்ன நடக்கும் என்பதையும் தெரிந்து கொள்வது முக்கியம்.
உறைந்த நிலையில் இருக்கும் இன்சுலின் மற்றும் காலவதியான இன்சுலின் மருந்துகளை மறந்தும்கூட பயன்படுத்த வேண்டாம்.
Alamy
பக்கவிளைவுகள்
டைப் 1 சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக இன்சுலின் ஊசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது.
டைப் 2 சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு செல்லும் போது இன்சுலின் ஊசிகளை எடுத்துக் கொள்கின்றனர்.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 8.4 மில்லியன் பேர் தினமும் இன்சுலின் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைகழகம் ஒன்றின் School of Medicineன் ஆய்விதழில் இன்சுலின் பயன்பாடு குறித்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதில், இயற்கையாகவே நம் உடலில் உற்பத்தியாகும் இன்சுலினின் செயல்பாடுகள் குறித்தும் மருந்தாக எடுத்துக் கொள்ளும் இன்சுலினின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இன்சுலினை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் போது ரத்த சர்க்கரை அளவு திடீரென குறைந்து ஹைப்போகிளைசீமியா என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே பக்கவிளைவுகளாக வலிப்பு, கோமா உட்பட மரணத்தை நோக்கி செல்லும் நிலை கூர வரலாம் என தெரியவந்துள்ளது.
இன்சுலின் பயன்படுத்தும் போது
இன்சுலினை பயன்படுத்தும் போது தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் வரலாம்.
இதற்கு காரணம் இன்சுலினை போட்ட இடத்திலேயே போடுவார்கள், இதனை சுழற்சி முறையில் போட வேண்டும்.
திங்கள் கிழமை மேல் பக்கமாக தொடங்கினால் அடுத்து வரும் நாட்களில் அதற்கு கீழ் ஒரு செமீ இடைவெளி விட்டு போடலாம்.
அடுத்த வாரம் அதற்கு பக்கவாட்டில் இருந்து தொடங்கலாம், ஒரே இடத்தில் போட்டுக் கொண்டிருந்தால் சருமத்தின் நிறம் மாறிவிடும், அந்த இடத்திலேயே மருந்தும் தங்கிவிட வாய்ப்பு அதிகமுண்டு.
மிக முக்கியமாக ரத்த சர்க்கரையின் அளவு குறைகிறதா என்பதை அவதானிக்கவும்.