கடைசியா உங்க டூத் பிரஷை எப்போ மாத்துனீங்கனு நியாபகம் இருக்கா? மறக்காம இதை தெரிஞசிக்கோங்க
நீங்கள் பயன்படுத்தும் டூத் பிரஷை எவ்வளவு நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
டூத் பிரஷை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?
காலை தூங்கி எழுந்ததும் உடனே பல் துலக்குவதை தான் நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். சிலர் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் பல் துலக்கவும் செய்கின்றனர்.
இதனால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பற்கலில் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படுகிறது. நமது பற்களின் பாதுகாவலனாக விலங்கும் டூத் பிரஷை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று நம்மில் பலருக்கும் தெரியாமல் உள்ளது.
ஆனால் இதனை சரியான கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக டூத் பிரஷை 3 மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பற்களில் சேரும் கிருமி, உணவு துகள்களை அகற்றும் பணியில் பிரஷ் ஈடுபடுகிறது. ஆனால் ஒரு பிரஷ்க்கு 3 மாதத்திற்கு மட்டுமே இந்த சக்தி இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதனால் 2 முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே டூத் பிரஷை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். இதை மீறி அதிக நாட்கள் நாம் பயன்படுத்தி வந்தால், உணவு கிருமிகள் நீக்கப்படாமல், பற்களில் பாதிப்பு ஏற்படுத்துகின்றது.
மேலும் நமது உடலில் ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அந்த நோய் குணமானவுடன் டூத் பிரஷை மாற்றி விடவேண்டுமாம். அப்படி செய்தால் கிருமி தொடர்ந்து நமது உடலை தாக்குவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
அடிக்கடி கடைக்கு சென்று பிரஷ் வாங்குவதற்கு பதிலாக மொத்தமாக பிரஷ்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ, பிரஷின் வாழ்நாள் காலாவதியானாலோ அவற்றை உடனே மாற்றிக் கொள்ள வசதியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |