வெறும் பத்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... இன்ஸ்டன்ட் கோதுமை தோசை!
உங்களால் வேறு எந்த சமையலையும் செய்ய முடியாத சோம்பலான அல்லது சோர்வான நாட்களில் செய்யக்கூடிய ஈஸி ரெசிப்பி இன்ஸ்டன்ட் கோதுமை தோசை.
இது செய்வது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முக்கிய பொருட்கள்
- 1 கப் கோதுமை மாவு
- நறுக்கிய பச்சை மிளகாய் 4
- நறுக்கிய கொத்தமல்லி இலை
- 1 தேக்கரண்டி சீரகம்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு நீர்

ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, சீரகம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலக்குங்க.
எல்லா பொருட்களையும் கலந்த பிறகு உப்பையும் இந்த கலவையில் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொண்டால் இன்ஸ்டன்ட் கோதுமை தோசை மாவு தயார்.
தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி கல் சூடானதும், தோசை மாவை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசை பொன் முறுகலாகும் வரை வேக விடுங்கள். பிறகு இரண்டு பக்கமும் தோசையை திருப்பிப் போட்டு எடுங்கள்.
இந்த சூடான தோசைய சட்னி, சாம்பார் மற்றும் சிறிதளவு நெய்யுடன் பரிமாறுங்கள். ஈவினிங் டிபனாக சாப்பிட மிகச் சிறந்த சாய்ஸ் இந்த கோதுமை தோசை.