அவசர பிரியாணி: ஐந்தே நிமிடத்தில் பிரியாணி சாப்பிடணுமா? இப்படி செய்ங்க
நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். சுட சுட, மண மணக்க மசாலா வகைகளை போட்டு பாஸ்மதி அரிசியில் பிரியாணி செய்தால் யாருக்கு தான் பிடிக்காது.
பிரியாணி செய்ய நிறைய பொருட்கள் தேவைப்படும் கொஞ்ச நேரமும் எடுக்கும். ஆனால் தற்போது செய்யப்போகும் பிரியாணி அவசர பிரியாணி ஆகும்.
அதாவது இந்த ரெசிபி நமக்கு கம்மியான நேரம் இருக்கிறது ஆனால் பிரியாணியும் சாப்பிட வேண்டும் என்பதற்கு ஏற்ற ரெசிபி. இதற்கு குறைவான பொருட்களும் குறைவான நேரமும் தான் தேவை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 250 பரியாணி அரிசி
- 3 டீஸ்பூன்எண்ணெய்
- பட்டை ஒரு துண்டு
- கிராம்பு
- ஏலக்காய்
- சோம்பு
- வெங்காயம்
- இஞ்சி
- பூண்டு
- புதினா
- கொத்தமல்லி
- பச்சை மிளகாய்
- தக்காளி
- உப்பு
- மஞ்சள் தூள்
- தயிர்
- தண்ணீர் 2 கப்
செய்யும் முறை
அவசர பிரியாணி கிச்சன் 250 கிராம் பிரியாணி அரிசி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
அடுப்பில், பாத்திரத்தை வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய், 2 டீஸ்பூன் நெய் ஊற்றி ஒரு துண்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கி தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.
தயிர் சேர்த்து மேலும் வதக்கவும். அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அரிசியைப் போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும். அவ்வளவு தான் அவசர பிரியாணி தயார்.
இதை குழந்தைகள் முதற்கொண்டு பெரஜயவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |