Online Bully: இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம் அறிமுகம்
பொதுவாக நம்மில் பலர் தினசரி வாழ்க்கையில் அதிகமாக செல்போனுடன் செலவிடுகிறோம்.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் இன்ஸ்டாகிராமில் Story போடுவது, Post போடுவது அதற்கு எவ்வளவு Comments, Likes பெற்றிருக்கின்றது என்பதனை பார்ப்பது இதனையே வேலையாக பார்க்கிறார்கள்.
சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரிடமும் தற்போது செல்போன் இருக்கின்றன. இதனால் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் ஆபத்துக்கள் கூடிக் கொண்டே போகின்றது.
சமூக வலைத்தளங்களால் ஏதாவது ஒரு வகையில் நாம் பாதிக்கப்பட்டிருப்போம்.
இதன்படி, தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராமில் தவறான தொடர்பாடல், உடல் ரீதியிலான தொந்தரவுகள் அதிகமாகி வருகின்றது.
இதனை தடுக்கும் விதமாகவும், இளைஞர்களை காக்கும் விதமாகவும் இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் ஒன்றை சேர்த்துள்ளது. இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராம் கொடுத்த புது feature
இன்ஸ்டாகிராமில் LIMIT மற்றும் Restricted என இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை பயன்படுத்தி நாம் போடும் Postகளை யார் பார்க்க வேண்டும், Comment செய்ய வேண்டும், Tag செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவெடுக்கலாம்.
நாம் பார்க்ககூடாது என்று நினைக்கும் பயனர்கள் புகைப்படத்திற்கு Comment, Messageகள் செய்தாலும் அது யாருக்கும் காட்டாது.
மேலும் ஆடையில்லா புகைப்படங்கள் தெரியாதவர்களிடமிருந்து பரிமாறும் பொழுது அது தானாகவே மறைந்து விடும். இந்த அம்சம் இளைஞர்களின் பாதுகாப்பு கருதி செயன்முறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |