இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட காதல்: தனிமையில் இருந்த ஜோடிகள்! பின்பு ஏற்பட்ட அதிர்ச்சி
இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட காதலால் தவறாக 17 வயது புகைப்படம் எடுதது மிரட்டிய இளைஞர் மற்றும் அவரது நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மதுரை அண்ணாநகரை சேர்ந்த 17 வயது சிறுமி, சிவகங்கை மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவருடன் 2019ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் நட்பாகிய நிலையில், காலப்போக்கில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமியின் வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாததால் இருவரும் பலமுறை தனிமையில் இருந்ததோடு, இதனை சந்தோஷ் வீடியோவாக எடுத்து மிரட்டியுள்ளார். மேலும் சிறுமியை பலமுறை மிரட்டி வன்புணர்வு செய்துள்ளார்.
மேலும், தனது நண்பர் ராகுல் மூலம் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவிடுவதாக கூறி சுமார் ரூ.50,000வரை பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாய் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து சிறுமியை காதலிப்பதாக கூறி வன்புணர்வு செய்த சந்தோஷ்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த ராகுல் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்பு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது, சிறுமியை மிரட்டியது, பணம் பறித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் பொலிசார் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.