இட்லி மாவில் சுவையான இனிப்பு பணியாரம் செய்வது எப்படி? 10 நிமிடம் ரெசிபி
தினமும் காலையில் இட்லி, தோசை, உப்புமா சாப்பிட்டால் வீட்டிலுள்ளவர்களுக்கு காலை உணவு என்றாலே சலிப்பு வந்து விடும். அதே சமயம், உடல் ஆரோக்கியத்தை சரிச் செய்யும் வகையிலும் நமது உணவு பழக்கங்கள் இருக்க வேண்டும்.
வாய்க்கும் சுவையாக இருக்க வேண்டும். காலையில் இட்லி மா அதிகமாக இருந்தால் இட்லி ஊற்றிவதிலும் பார்க்க, சுவையான பணியாரம் செய்யலாம்.
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி இல்லாவிட்டால் மாலை நேரம் டீக்கும் நன்றாக இருக்கும். இனிப்பு குழி பணியாரம் பலரும் சாப்பிட்டிருப்பார்கள்.
தினமும் இட்லி, தோசையாக கொடுப்பதற்கு பதிலாக இப்படி கொடுத்தால் சுவையும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில், இட்லி மாவு பயன்படுத்தி இனிப்பு பணியாரம் எப்படி செய்யலாம் என்பது பற்றி பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கெட்டியான இட்லி மாவு - 3 கப்
- அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
- கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- வெல்லப்பாகு - 3/4 கப்
- துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
- நெய்/எண்ணெய் - தேவையான அளவு
இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி மாவு, அரிசி மாவு, கோதுமை மாவு, வெல்லப்பாகு அனைத்தையும் கிளறி நன்றாக கலந்து கொள்ளவும்.
பாகு ஊற்றிய கிளறும் பொழுது மாவு கெட்டியான பதத்திற்கு வரும். இந்த பதத்தில் வைத்து பணியாரம் செய்தால் எண்ணெய் அதிகமாக போகும். இந்த பதத்தில் மா இருக்கும் பொழுது கொஞ்சமாக அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் கொஞ்சமாக துருவிய தேங்காய் பூ சேர்த்து கிளறி விட்டு பணியாரமாக ஊற்றலாம்.
அடுத்து, அடுப்பில் ஒரு பணியாரக் கல்லை வைத்து அனைத்து குழிகளிலும் நெய் ஊற்றி சூடானதும் தயார் நிலையில் மாவை எடுத்து முக்கால் குழி அளவிற்கு ஊற்றவும்.
அடுப்பை குறைந்த தீயில் வைத்து, ஒரு புறம் சிவந்து வந்ததும் கத்தியால் மறுபுறம் திருப்பி பொன்னிறமாக வரும் வரை வேக விட்டு எடுத்தால் சுவையான இனிப்பு பணியாரம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |