ருசித்து உண்ணப்படும் மண், மசாலா மலை, உப்பு தெய்வம்! எந்த நாட்டில் தெரியுமா?
பொதுவாக நாம் சமுக வலைத்தளங்களில் நிறைய நாடுகளின் சிறப்புக்கள் குறித்து பார்த்திருப்போம்.
இவ்வாறு பார்க்கும் பொழுது சில இடங்கள் இந்த உலகம் போல் அல்லாமல் அதிசயங்களால் நிரம்பியிருக்கும்.
இது போன்ற ஒரு தீவு தான் ஹோமுஸ் தீவு. இதனை புகைப்படங்களை விட நேரில் பார்க்கும் போது வேறு கிரகம் போல் இருக்கும்.
அந்த வகையில் ஹோமுஸ் தீவில் பழுப்பு நீரோடைகள், கருஞ்சிவப்பு நிறக் கடற்கரைகள், உப்புக் குகைகள், வண்ண வண்ணமான படிகங்கள் என பல வகைப்பட்ட இடங்களை காணலாம்.
இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
ஹோமுஸ் தீவு
பாரசீக வளைகுடாவில் ஈரான் பரப்பில் சரியாக 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தீவு தான் ஹோமுஸ்.
இந்த தீவை மேலிருந்து பார்க்கும் போது நீர்த்துளி போல் காட்சியளிக்கும். ஆனால் இந்த தீவு உப்புத் தீவு 42 சதுர கிலோமீட்டர் பரப்புடையது. இதனை பார்க்கும் பொழுது வேறு கிரகம் போல் இருக்கும்.
வித்தியாசமான நிறங்களில் காணப்படுவது குறித்து பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.
இதன்படி, ஹோமுஸ் தீவிலுள்ள உப்பு அடுக்குகள் அங்குள்ள கனிமங்களுடன் இருக்கும் எரிமலைகள் வண்டலுடன் கலந்துக் கொள்ளும். இதன் காரணமாக தான் ஹோமுஸ் தீவு பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்கின்றது.
உப்பு மிதக்கும் தன்மையை கொண்டிருப்பதால் எரிமலை விரிசல்கள் வழியாக மேலிருந்து பார்ப்பதற்கு உப்பு தீவாக காட்சி கொடுக்கின்றது.
சிகப்பு மலை
சிகப்பு மலை விஞ்ஞான ரீதியாக ஹோமேசில் ஜெலாக் என அழைக்கப்படுகின்றது. இங்கு அதிகமான செந்திற பாறைகள் காணப்படுகின்ற நிலையில், ஹெமாடைட் என்ற இரும்பு ஆக்ஸைடின் பெறப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்த பதார்த்தம் இரும்பு ஆக்ஸைடு தொழில்துறையில் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இது தான் மக்கள் சாப்பிடும் மசாலா பொருளாக மாற்றப்படுகின்றது.
மண்வாசணை சுவையை தரும் இந்த பதார்த்தம் “சாஸ் சூரக்“ என அழைக்கப்படுகின்றது.
இந்த மண்ணை உள்ளூர் கலைஞர்கள் பானைகளுக்கு சாயமிடுதல், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஓவியங்கள் என ஆக்க வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
உப்பு தெய்வம்
ஹோமுஸ் தீவின் மேற்கு பகுதியில் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு உப்பு மலை காணப்படுகின்றது. வெளிறிய குகைகளுடன் கூடிய இந்த மலையை உப்பு தெய்வம் என அழைப்பார்கள்.
இந்த உப்பு வீடுகளில் வைப்பதால் எதிர்மறையான சக்திகள் இல்லாமலாகி தூய்மை சக்தி வீட்டிற்கு வருவதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |