இந்தியா - நியுசிலாந்து 3-வது டி20 போட்டி - முக்கிய வீரருக்கு பதிலாக களமிறங்கும் சென்னை வீரர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் மேட்சகள் விளையாடி வருகிறது. ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இரண்டிலும் இந்திய அணியே வெற்றி பெற்று இருக்கிறது.
இதனிடையே, இன்றைய 3-வது டி20 போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இன்றைக்கன போட்டியில் இந்திய அணி இளம் வீரர்களை வைத்து அவர்களின் திறனை பரிசோதிக்கும் என்று தெரிகிறது. கடைசி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை முழுவதுமாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், மூன்று இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால், கே.எல் ராகுல் நல்ல பார்மில் இருப்பதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் திறனை பரிசோதிக்க வாய்ப்பு வழங்கலாம் என்று தெரிகிறது.

மேலும், பவுலர் புவனேஷ்குமாருக்கு பதிலாக ஆவேஷ் கானுக்கும், முன்னணி பவுலரான் அஷ்வினுக்கு பதிலாக சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.அதேப்போல் நியூசிலாந்தி அணியிலும் மாற்றங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் ப்ளேயிங் 11
ரோஹித் சர்மா, கே. ராகுல் / ருதுராஜ் கெய்க்வாட், சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், அஷ்வின் / சாஹல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார் / ஆவேஷ் கான், தீபக் சாகர்.